பாலியல் வன்முறை: மீண்டும் மீண்டும்..!
Dinamani Chennai|December 31, 2024
சட்டங்கள் மட்டும் போதாது. சமுதாயமும் மாற வேண்டும். பெண்களைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு பரவலாக வேண்டும். பெண்கள் துணிவு கொள்ள வேண்டும். தொடர் போராட்டங்கள் வேண்டும்.
முனைவர் இரா. கற்பகம்

கொல்கத்தா பெண் மருத்துவருக்கே தைரியமாகப் புகார் செய்கிறார்; இன்னும் நீதி கிடைத்தபாடில்லை; அதற்குள் சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பாலியல் வன்முறை நடந்துள்ளது. மீண்டும் மீண்டும் பெண்கள் வன்முறைக்கு ஆளாகிறார்களே, நம் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா, இல்லையா? பெண்களுக்கு நீதி கிடைக்குமா, இல்லையா? பெண்கள் பாதுகாப்புக்கெனச் சட்டங்கள் பல இருக்கின்றன; அவற்றைப் பற்றி பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி தெரியவில்லை; அவற்றை நன்கு அறிந்தும் முறையாக நடைமுறைப்படுத்தும் உறுதி அரசு இயந்திரத்துக்கு இல்லை.

1956-ஆம் ஆண்டிலிருந்து 'பெண்களைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் சட்டம்' (1956), நடைமுறையிலுள்ளது. ஆனால் இன்றும் நம் நாட்டில் எத்தனை பெண்கள், எத்தனை சிறுமிகள் கடத்தப்பட்டுப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்? இவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டு மறுவாழ்வு பெறுகிறார்கள்? எத்தனை பேர் கடைசிவரை அப்படியே இருந்துவிடுகிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள் அரசுகளிடம் உள்ளதா? இதைப் பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் உள்ளதா? இச்சட்டம் உண்மையிலேயே பெண்களுக்குப் பாதுகாப்புத் தருகிறதா? இக் கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் இல்லை.

பாலியல் தொழில் இருக்கும் வரை, பெண்களைச் சட்டத்துக்குப் புறம்பாகக் கடத்திச் சென்று, அத்தொழிலில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போம். தேவதாசி முறையை எதிர்த்து சட்டசபையில் முத்துலெட்சுமி அம்மையார் தீர்மானம் கொண்டு வந்தார். தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. பாலியல் தொழிலைப் 'புராதனத் தொழில்' என்று கருதும் சமுதாயம் இருக்கும் வரை, ஆண்களின் உணர்ச்சி வடிகால்களுக்கு விலை மாதர்கள் தேவை என்று கருதும் ஆண் வர்க்கம் இருக்கும் வரை, பெண்களை வைத்துச் சம்பாதிக்கும் ஆண்களும் பெண்களும் இருக்கும் வரை, இச்சட்டத்தினால் பெண்களுக்குப் பெரிதாகப் பாதுகாப்புத் தந்துவிட முடியாது.

இப்போதுள்ள தொலைத்தொடர்பு வசதிகளும், வலைதளங்களின் மூலம் உருவாகும் கூடா நட்புகளும் உறவுகளும், இளம் பெண்களை வலையில் விழச் செய்கின்றன. அப்படி மாட்டிக் கொள்ளும் பெண்கள் எளிதில் தப்பித்து வர இயலாது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறைக் குத் தெரிந்தே இக்கொடுமைகள் நடக்கும் போது சட்டத்தினால் என்ன பயன்?

この記事は Dinamani Chennai の December 31, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の December 31, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
பருவநிலை மாற்றத்தால் 50% பேருக்கு சிறுநீரக செயலிழப்பு
Dinamani Chennai

பருவநிலை மாற்றத்தால் 50% பேருக்கு சிறுநீரக செயலிழப்பு

தமிழகத்தில் 50 சதவீதம் பேருக்கு பருவநிலை மாற்றம் காரணமாகவே நாள்பட்ட சிறுநீரக நோய்களும், சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டதாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 13, 2025
Dinamani Chennai

அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

time-read
1 min  |
March 13, 2025
பிகார் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்
Dinamani Chennai

பிகார் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்

முதல்வரை 'கஞ்சா அடிமை' என குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு

time-read
1 min  |
March 13, 2025
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின்னுற்பத்தி திட்டம்
Dinamani Chennai

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின்னுற்பத்தி திட்டம்

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

time-read
1 min  |
March 13, 2025
Dinamani Chennai

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்

தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

time-read
1 min  |
March 13, 2025
இந்தியா-மோரீஷஸ் 8 ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

இந்தியா-மோரீஷஸ் 8 ஒப்பந்தங்கள்

பிரதமர்கள் முன்னிலையில் கையொப்பம்

time-read
2 分  |
March 13, 2025
Dinamani Chennai

சத்துணவு மைய ஊழியர்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி

தமிழக அரசு உத்தரவு

time-read
2 分  |
March 13, 2025
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: சித்தராமையாவுக்கு அழைப்பு
Dinamani Chennai

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: சித்தராமையாவுக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் க.பொன்முடி அழைப்பு விடுத்தார்.

time-read
1 min  |
March 13, 2025
காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ்
Dinamani Chennai

காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ்

ஆண்டின் முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

time-read
1 min  |
March 13, 2025
Dinamani Chennai

விரிவுபடுத்த வேண்டும்!

விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

time-read
2 分  |
March 13, 2025