試すGOLD- Free

தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!

Dinamani Karaikal|March 25, 2025
அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.
- முனைவர் வைகைச்செல்வன்

தமிழகத்தினுடைய நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில், நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்கிற வகையில், நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்கி இருக்கிறது. இதனால் 2025-26-ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் தொகை ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் 70 ஆயிரத்து 753 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டியதிருக்கும். இவ்வாறாகக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை ஒப்பிடும் போது ஒவ்வொரு தனிநபர் மீதும் 1.25 லட்சம் ரூபாய் கடன்சுமை சுமத்தப்பட்டிருக்கும்.

'எல்லோருக்கும் எல்லாம்' என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இவைதானோ? ஒவ்வொரு தனிநபரின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் கடனைத்தான் இவ்வாறாகத் தமிழக அரசு பெருமை பொங்கப் பேசுகிறதோ?

நான்காண்டுகளாக மடிக்கணினித் திட்டம் நிறுத்தப்பட்டு தற்போது அதற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இனி 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அல்லது கைக்கணினிகள் வழங்கப்படும் என்று சொல்வது தேர்தலுக்கான நோக்கமாக இருக்குமே தவிர, வேறு எதுவாக இருக்க முடியும்? பந்தி முடிந்த பிறகு பசியாற வந்த விருந்தாளியைப் போல, சந்தை முடிந்த பிறகு சரக்கு வாங்க வந்த வியாபாரியைப் போல, தேரோட்டம் முடிந்த பிறகு, திருவிழாவைக் காண வந்த பக்தனைப் போல, வாக்குப்பதிவு முடிந்து விட்ட பிறகு வாக்களிக்க வந்த வாக்காளனைப் போல, நோயாளி மடிந்து விட்ட பிறகு, மருந்து வாங்கி வந்த உறவினரைப் போல, யாது செய்வது, எதைச் செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்படுகிற திட்டமாக இவை சொல்லப்படுகிறது. ஆனால், திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்குவது சாத்தியமில்லை என்பதே உண்மையாகும்.

பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2,562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. போதிய நிதியும் ஆசிரியரும் இல்லாமல், அரசுப் பள்ளி மாணவர்களை உலகத் தரத்துக்கு மாற்றவா முடியும்? உள்ளூர் தரத்தையே அவர்கள் பெற இயலாமல் போகும்.

この記事は Dinamani Karaikal の March 25, 2025 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Karaikal の March 25, 2025 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI KARAIKALのその他の記事すべて表示
Dinamani Karaikal

நிதிசாரா துறை சீர்திருத்தங்களுக்கான உயர்நிலைக் குழு விரைவில் செயல்பட வேண்டும்

நிதிசாரா துறை களில் ஒழுங்காற்று நடைமுறை சீர்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலர் அஜய் சேத் சனிக்கிழமை வலியுறுத்தினார்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை விரிவுபடுத்தினர்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

செவிலியர்களுக்கு வரப்போகுது யோகம்..!

பி.எஸ்சி. செவிலியர் படிப்பைப் பயின்ற தகுதியான செவிலியர்களுக்கு, தாம்பரம் சேலையூரில் உள்ள நூலகத்தில் 6 மாதங்கள் இலவசமாக ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவித்து, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு பெற்றுத் தருகிறது என்கிறார் ஜெர்மானிய மொழியைக் கற்பிக்கும் பயிற்சியாளர் மெர்சி.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் நீப்ரோ நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

சாகர் திட்டத்தின் கீழ் 44 வெளிநாட்டு வீரர்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் 'சாகர்' திட்டத்தின் கீழ் 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கடற்படை சார்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

சாய் சுதர்ஷன் அதிரடி: குஜராத் 196/8

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்ஷன் அதி ரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 196/8 ரன்களைக் குவித்தது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்: முதல்வர்

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையை ஆயத்தப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

திறனாய்வில் தனித்தடம் பதித்த தி.க.சி!

மிழில் திறனாய்வுக் கலையானது வ.வே.சு. ஐயரின் முயற்சிகளிலிருந்து தொடங்குகிறது. ரசனைப் பூர்வமான திறனாய்வுக்கு அது வகை செய்ததோடு, கம்பனின் படைப்புத் திறனையும் இதர உலக மகாகவிகளின் ஆற்றலை ஒப்பிட்டு, ஒப்பியல் திறனாய்வை அவர் வளர்த்தார்.

time-read
2 分  |
March 30, 2025
Dinamani Karaikal

உலக அளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு தென்னாப்பிரிக்கா

5-ஆவது இடத்தில் இந்தியா

time-read
1 min  |
March 30, 2025

当サイトではサービスの提供および改善のためにクッキーを使用しています。当サイトを使用することにより、クッキーに同意したことになります。 Learn more