விஜய் கட்சி மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இன்னும் 3 நாட்களே இருப்பதால் மாநாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரவுக்குள் அனைத்துப் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேடைப் பகுதிக்கு மட்டும் பந்தல் அமைக்கப்படுகிறது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வடிவில் முகப்பு வாயில் உருவாக்கப்படுகிறது. 60 அடி உயரத்தில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் ‘கட்-அவுட்’களுடன் விஜயின் படமும் வைக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அதை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். அவரது குறிக்கோள் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதுதான்.
அதற்கேற்ப ஏற்பாட்டுப் பணிகளை செய்து வந்தார். கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு மாநாடு நடத்த திட்டமிட்டார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
அங்கு செப்டம்பர் 23-ஆம் தேதி மாநாடு நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அத்துடன் 33 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இதனால் மாநாட்டை தள்ளிப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்படி அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என விஜய் முறைப்படி அறிவித்தார். தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மாநாட்டை பாதிக்கலாம் என கருதப்பட்டது.
この記事は Malai Murasu の October 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の October 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து
அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லையா? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!!
உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம்!
புதுவகை ஏவுகணை மூலம் தாக்கினோம்:
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்!
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி:
5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!
இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்பாடு குறித்த நேரடி கள ஆய்வு!
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் கலந்துகொண்டனர்!!
ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் ரூ. 1,750 கோடி!
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் உள்பட
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது!
திடீர் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர்:
சென்னை பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் உருவான 21 மாடி ‘டைடல்’ பூங்கா!
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்; 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!!
நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!
* முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் சம்பவம்; * கும்பகோணத்தில் கட்சியினர் தள்ளுமுள்ளு!!