பாலர் பள்ளித் துறையில் 283 பேருக்கு விருது
Tamil Murasu|October 12, 2024
பாலர் பள்ளி நிர்வாக உதவியாளராக 13 ஆண்டுகளுக்குமுன் பாலர் கல்வித் துறையில் தமது பயணத்தைத் தொடங்கினார் திருவாட்டி பெனாசிர் ஹனிஃப் முகமது, 31.
ரவி சிங்காரம்
பாலர் பள்ளித் துறையில் 283 பேருக்கு விருது

ஆயினும், மாணவர்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களது வளர்ச்சிக்கு வித்திடுவதே தம்மை ஈர்ப்பதாக உணர்ந்த அவர், பாலர் பள்ளி ஆசிரியராகத் தகுதிபெற பட்டயக்கல்வி மேற்கொண்டார்.

இப்போது அவர் சாட்ஸ்வர்த் பாலர் பள்ளியின் (கிளமெண்டி) மூத்த தலைமையாசிரியராகவும், தேசிய கல்விக்கழகப் பயிற்சியாசிரியர்களுக்கான இணை மேற்பார்வையாளராகவும் (Adjunct Supervisor) பணிபுரிகிறார்.

இவ்வாண்டு பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற ஒரே ஆசிரியரான திருவாட்டி பெனாசிர் ஹனிஃப் முகமது, 31. படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

அத்துடன், தேசிய கல்விக்கழகத்தில் பாலர் கல்வி முதுநிலைப் பட்டப் படிப்பையும் பகுதிநேரமாகப் பயின்று வருகிறார் திருவாட்டி பெனாசிர். அதற்கான முழுச் செலவையும் ஈடுகட்டும் உபகாரச் சம்பளத்தை இவ்வாண்டு அவர் ஒருவருக்கே பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு வழங்கியது.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) நடைபெற்ற பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் வருடாந்தர விருதளிப்பு விழாவில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அவருக்கு இவ்விருதை வழங்கினார்.

தன் குடும்பத்தினர், அமைச்சர் மசகோஸ்ஸுடன் திருவாட்டி பெனாசிர் ஹனிஃப் முகமது. படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

தலைமைத்துவப் பண்புகளையும், கூடுதல் பொறுப்புகளை ஏற்கும் நாட்டத்தையும் கொண்டுள்ள பாலர் கல்வி ஆசிரியர்கள் இத்துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளை மேற்கொள்ள இந்த உபகாரச் சம்பளம் ஆதரவு வழங்குகிறது.

この記事は Tamil Murasu の October 12, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Murasu の October 12, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MURASUのその他の記事すべて表示
‘சிம்’ மாணவர்களுக்குப் புதிய $60 மி. நிதியம்
Tamil Murasu

‘சிம்’ மாணவர்களுக்குப் புதிய $60 மி. நிதியம்

‘சிம்’ எனப்படும் சிங்கப்பூர் நிர்வாகக் கழகம், தனது 60ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி புதிதாக 60 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள நிதித்திட்டத்தை அறிவித்துள்ளது.

time-read
1 min  |
November 29, 2024
Tamil Murasu

இலங்கைப் பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் வோங் வாழ்த்து

இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்ற ஹரிணி அமரசூரியாவுக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

time-read
1 min  |
November 29, 2024
மழையால் 33% பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் பன்னீர்செல்வம்
Tamil Murasu

மழையால் 33% பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் பன்னீர்செல்வம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.மழையால் 33% நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்து இருந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

time-read
1 min  |
November 29, 2024
Tamil Murasu

மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு

மணிப்பூரின் இம்பால் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாள்களுக்குப் பிறகு நவம்பர் 29 முதல் மீண்டும் தொடங்கும் என அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
November 29, 2024
Tamil Murasu

சீனாவை முந்திக்கொண்டு தைவான் போர்ப் பயிற்சி

தைவான் ராணுவம் தனது எதிர்த் தாக்குதல் திறனைச் சோதிக்க வியாழக்கிழமை (நவம்பர் 28) காலையில் விமானத் தற்காப்புப் பயிற்சியை நடத்தியது.

time-read
1 min  |
November 29, 2024
இந்தோனீசிய நிலச்சரிவுகளில் குறைந்தது 27 பேர் மரணம்
Tamil Murasu

இந்தோனீசிய நிலச்சரிவுகளில் குறைந்தது 27 பேர் மரணம்

இந்தோனீசியாவின் வடசுமத்திரா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவற்றின் காரணமாக குறைந்தது 27 பேர் மாண்டுவிட்டதாக நவம்பர் 28ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
November 29, 2024
15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கார் பந்தயத்தில் அஜித்
Tamil Murasu

15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கார் பந்தயத்தில் அஜித்

ஒருபுறம் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், மறுபுறம் தனது கார் பந்தயம் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

time-read
1 min  |
November 29, 2024
எங்கள் வீட்டுக்கு மகாலட்சுமி கிடைத்துள்ளார்: சித்தார்த்
Tamil Murasu

எங்கள் வீட்டுக்கு மகாலட்சுமி கிடைத்துள்ளார்: சித்தார்த்

அதிதி போன்ற ஒரு பெண் மனைவியாக அமைந்தது நான் பெற்ற வரம் என்று நேர்காணல் ஒன்றில் சித்தார்த் கூறியுள்ளார்.

time-read
1 min  |
November 29, 2024
சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்திய விருந்து
Tamil Murasu

சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்திய விருந்து

இந்து அறக்­கட்­டளை வாரி­ய­மும் இந்து ஆலோ­சனை மன்றமும் இணைந்து ஆண்டுதோறும் ஏற்­பாடு செய்துவரும் தீபாவளி தேநீர் விருந்து நிகழ்ச்சி புதன்கிழமை (நவம்பர் 27) சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
November 29, 2024
பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்
Tamil Murasu

பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் நவம்பர் 28ஆம் தேதியன்று காலமானார்.

time-read
1 min  |
November 29, 2024