20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிவறையும் 50 மாணவர்களுக்கு ஒரு மலக்கழிவறையும் இருக்க வேண்டும் என்பது மத்திய கல்வி அமைச்சு வகுத்துள்ள விதிமுறை.
ஆனால், இந்திய அளவில் சுமார் 5,000 தனியார் பள்ளிகளில்கூட போதுமான கழிவறை வசதிகள் இல்லை என்பது ‘ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் முறை+ 2019-20’ (UDISE+ - Unified District Information System For Education Plus) ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழகம், புதுடெல்லி, பஞ்சாப், கோவா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறை வசதி உள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் நூறு விழுக்காடு அளவுக்கு குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் ஏறக்குறைய 58 விழுக்காடு பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என்பது வேதனை தரும் தகவல்.
இந்தியாவில் உள்ள 14.65 லட்சம் பள்ளிகளுக்கு குடிநீர்க் குழாய், பாக்கெட் குடிநீர், கிணறுகள், அடிபம்புகள், பிற ஆதாரங்கள் மூலமாக குடிநீர் கிடைக்கிறது. எனினும், நாட்டில் உள்ள 29 மாநிலங்களுக்குப் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற கிணறுகளின் மூலமாகத்தான் குடிநீர் கிடைப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இவற்றுள், தமிழகத்தில் 56,000 பள்ளிகள், குடிநீர்க் குழாயை நம்பி உள்ளன. பாக்கெட் குடிநீர் மூலம் 578 பள்ளிகளும் கிணறுகள் மூலம் 285 பள்ளிகளும் பிற ஆதாரங்கள் மூலம் 1,134 பள்ளிகளும் குடிநீர் பெறுகின்றன.
தண்ணீருக்கும் கழிவறைகளுக்கும் தொடர்பு இருப்பதால்தான் இந்தத் தகவல்களை குறிப்பிட வேண்டியுள்ளது. கழிவறைகள் கட்ட கடன் உதவி இவ்வாறு பல்வேறு கவலைக்குரிய அம்சங்களை ஆராய்ந்த பிறகே, பிரதமர் மோடி நாடு முழுவதும் கழிவறைகளைக் கட்டவேண்டும் என்றும் இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் முகம் மாறும் என்றும் கூறினார்.
‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மட்டும் மார்ச் 2021ஆம் ஆண்டு வரை 508,000 லட்சம் தனிநபர் இல்லக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 93,000 பொதுக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
この記事は Tamil Murasu の November 30, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の November 30, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
முக்கியமான மூன்று துறைகள வேண்டும்: ஏக்நாத் நிபந்தனை
பிரதமர் மோடி முன்னிலையில் டிசம்பர் 5ஆம் தேதி புதிய மகாராஷ்டிர முதல்வர் பதவி ஏற்பு
காதல் குறித்து தெளிவாகப் பேசும் படம்: கிருத்திகா
கிருத்திகா உதயநிதியின் அடுத்த படைப்பாக 'காதலிக்க நேரமில்லை' படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைகாண உள்ளது.
விஜய் மகன் இயக்கும் படத்தின் நாயகன் சந்தீப் கிஷன்
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
சிறுவர்களை மயக்கிய “ஸ்டாண்டர்ட் சார்டர்ட்’ ஓட்டம்
'ஓடி விளையாடு பாப்பா' என பாரதியார் அன்று கூறினார் அல்லவா? அதுபோல ஓடி விளையாடுவது சிறுவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்துக்கும் மிக முக்கியமானதும்கூட.
சிரியாவில் மோசமான தாக்குதல்; பல ராணுவ வீரர்கள் பலி
சிரியாவில் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஹயாத் தாஹிர் அல்-ஷாம் (எச்டிசி) நடத்திய பெரிய அளவிலான தாக்குதலில் தங்களின் பல வீரர்கள் மாண்டு விட்டதாக அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமை (நவம்பர் 30) தெரிவித்தது.
இன நலன் பாதுகாக்கப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
மலாய்க்காரர்கள் மத்தியில் எழுந்துள்ள கவலை தவறானது
தைவான்: போருக்கு எதிராக ஒன்றிணைவோம்
போரில் வெற்றியாளர் என்று ஒருவரும் இல்லை என்று கூறியுள்ளார் தைவான் அதிபர் லாய் சிங்-தே.
வயநாடு மக்களுக்கு நன்றிகூறிய பிரியங்கா பாஜகவை தாக்கினார்
மக்களவை இடைத்தேர்தலில் தம்மை வெற்றியடையச் செய்த கேரளாவின் வயநாடு வாக்காளர்களுக்கு சொல்ல நேரடியாக நன்றி வந்த பிரியங்கா காந்தி, பாஜகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
கடலூரில் விடிய, விடிய கனமழை: குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது
கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்ததால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. அவை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.
முதலமைச்சர் 24 மணிநேரமும் மக்களுக்காக பாடுபடுகிறார்: அமைச்சர் சேகர் பாபு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறக்கமின்றி 24 மணிநேரமும் மக்களுடைய நலனுக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறினார்.