தென்னிந்திய பாரம்பரிய கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோயில், சிங்கப்பூரின் ஆக பழைமையான இந்துக் கோயிலாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழாவில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட கோயிலின் அழகைக் கண்டு மகிழ்ந்தனர்.
இருப்பினும், பல ஆண்டுகாலமாக வானிலையாலும் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளாலும் கோயில் சற்று சேதமடைந்த நிலையை எட்டவே, புதுப்பிப்புப் பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன.
உயர் தொழில்நுட்பத்துடன் நடந்த மறுசீரமைப்பு
கிட்டத்தட்ட $3.5 மில்லியன் செலவில் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோயிலின் மறுசீரமைப்புப் பணித்திட்டம், ‘கெய்டு ஆர்கிடெக்ட்ஸ்’ (CAIDE Architects), ‘மேக் கன்சல்டிங்’ (Maek Consulting) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்து அறக்கட்டளை வாரியத்தால் வழிநடத்தப்பட்டது.
“கோபுரங்களும் விமானங்களும் அதிகம் பழுதடைந்திருந்ததால் அவற்றைக் கழுவி மீண்டும் வண்ணம் தீட்டுவது சவாலாக இருந்தது,” என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ராஜன் கிருஷ்ணன்.
இதற்கு உதாரணமாக, அவர் ராஜ கோபுரத்தை எடுத்துக்காட்டினார்.
“பல ஆண்டுகளாக சிற்பங்களின் மீது சாயம் அடுக்கடுக்காகப் பூசப்பட்டு வந்ததால் அவற்றின் கண்கள், மூக்கு, ஆபரணங்கள் போன்ற நுட்பமான வேலைப்பாடுகள் மங்கிக் காணப்பட்டன. இதைச் சரிசெய்ய இதுவரை பூசப்பட்ட சாயம் அனைத்தையும் அகற்ற முடிவு செய்தோம்.
“முன்பு பூசப்பட்ட சாயங்களை முற்றிலும் அகற்ற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகின. ஒவ்வோர் அடுக்குச் சாயத்தையும் அகற்றியபோது அதன் காலகட்டத்தையும் நிலையையும் தீர்மானிக்க ஆய்வுகள் செய்யப்பட்டன,” என்று விளக்கினார் அவர்.
ஆளில்லா வானூர்தியைக் கொண்டு முப்பரிமாண ஒளிப்பட அளவியல் ஸ்கேன் (3D photogrammetry scan), ரசாயனப் பகுப்பாய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தியபோது, நீண்ட காலமாக மறைந்திருந்த இரண்டு துவாரபாலகர்களின் சுவர் ஓவியங்கள் போன்ற முக்கியமான வரலாற்றுக் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
この記事は Tamil Murasu の December 08, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Murasu の December 08, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
விஷால் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை
நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
‘அஜித் வெற்றிக்கு விடாமுயற்சியே காரணம்’
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஜனவரி 30ஆம் தேதி அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
விஜய் படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்: மீனாட்சி
விஜய்யுடன் இணைந்து நடித்ததால் தனது திரைப்பயணம் தொய்வடைந்து விட்டதாகக் கூறியுள்ளார் நடிகை மீனாட்சி சௌத்ரி. இவர் ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.
எரிசக்தி பல்வகைப்படுத்துதல் தளமாகத் திகழ மலேசியா இலக்கு
எரிசக்தி, விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்துதல் தளமாக இவ்வாண்டு திகழ மலேசியா இலக்கு கொண்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை
தமிழகம் முழுவதும் கரும்பு, அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) காலை தொடங்கிவைத்தார்.
எதிர்காலம் போரில் அல்ல, அமைதியில் உள்ளது: மோடி
ஒடிசாவில் நடைபெறும் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
3,800க்கும் மேற்பட்ட சட்டவிரோத சூதாட்டத் தளங்கள்: கா. சண்முகம்
$37 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதப் பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டன
ஃபேர்பிரைசில் சீனப் புத்தாண்டு வரை கடல் உணவு, காய்கறி விலை மாறாது
சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் வரும் ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து சீனப் புத்தாண்டு காலம் வரை 15 பிரபல கடல் உணவு வகைகள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி விற்கப்படும் என ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமை (ஜனவரி 9) தெரிவித்தது.
மலேசியாவில் மேலும் இரண்டு இடங்களில் சிங்கப்பூர்த் தூதரகம்
புத்ராஜெயா: சிங்கப்பூர் அரசாங்கம், மலேசியாவில் இரண்டு இடங்களில் புதிய தூதரக அலுவலகங்களைத் திறக்கவிருக்கிறது.
லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீயில் குறைந்தது ஐவர் மரணம்
லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துவிட்டனர்.