இதில் 102 மாணவர்கள் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதற்கிடையே, மருத்துவக் கலந்தாய்வு இன்னும் தொடங்கப் படாததால், ஜூலை 2ஆ-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வைப் பொறுத்து, பொறியியல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில் உள்ள 1.54 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5ஆ-ம் தேதி தொடங்கி ஜூன் 4ஆ-ம் தேதி வரை நடந்தது. பொறியியல் கல்லூரிகளில் சேர 2.29 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 1.88 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணத்துடன் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர்.
ரேண்டம் எண் வெளியீடு
இவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஜூன் 6ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து, ஜூன் 20ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், தகுதியானவர்களின் தரவரிசைப் பட்டி யலை உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி நேற்று (26.6.2023) வெளியிட்டார்.
இதில் 1,06,384 மாணவர்கள், 72,558 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் என 1,78,959 பேர் என மாணவர்கள் சேர்க்கைக்கு தகுதி பெற்றனர். தகுதியின்மை காரணமாக 3,828 விண்ணப்பங்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு காரணமாக 5,060 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
この記事は Viduthalai の June 27,2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Viduthalai の June 27,2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!