மணிப்பூரில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், இன, மத மோதலைத் தூண்டிவிடும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் இன்று (26.7.2023) 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், அங்கு கடந்த மூன்று மாதங்களாக மக்கள் வேட்டையாடப்பட்டும், ஒன்றிய அரசோ, மாநில அரசோ பாராமுகம் மட்டுமல்லாமல், துணைபோகும் நிலையைக் கண்டித்தும், திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் பெருந்திரளான மகளிர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட் டம் இன்று (26.7.2023) முற்பகல் சென்னையில் நடைபெற்றது.
மணிப்பூரில் மைதேயி - குகி சமூகத்தவர்களிடையேயான மோதலால் விளைந்த வன்முறை, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்வது வேதனைக்குரியது. பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை களும் பல நாள்களுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
மணிப்பூரில் சமவெளியில் வாழும் மைதேயி சமூகத்தினருக்குப் பட்டியல் பழங்குடியினர் தகுதி வழங்கு வதற்கு ஆதரவாக அம்மாநில உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு, அம்மாநிலத்தின் மலைவாழ் பழங்குடி சமூக மான குகி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3 ஆம் தேதியன்று தொடங்கிய மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் காயமடைந்தனர், வீடுகளை இழந்துள்ளனர்.
பெரும்பான்மை மக்களாக இருக்கக் கூடிய மைதேயி சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிறுபான்மையாக இருக்கக் கூடிய பழங்குடியினரை வீடு புகுந்து தாக்கியும், படு கொலை செய்தும், வீடுகளை இடித்தும், தீ வைத்தும் கோரதாண்டவம் ஆடியுள்ளனர்.
இந்த மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தி யாவைத் தலைக்குனிய செய்துவிட்டது. வன்முறையாளர்கள் எந்த அளவுக்குச் சென்றுள்ளனர் என்பதற்கு 19.7.2023 அன்று வெளிவந்த வீடியோ காட்சி நாட்டையே உலுக்கிவிட்டது.
この記事は Viduthalai の July 26, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Viduthalai の July 26, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!