'பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டுதோறும் 60 கோடி மக்கள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். 4.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 70 சதவீதம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்' என்பதுதான் அந்த அதிர்ச்சிகரமான தகவல்.
உலக சுகாதார நிறுவன கணக்குபடி, உலகில் 10 பேரில் ஒருவர் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் நோய்வாய்ப்படுகிறார்கள். இதன் விளைவாக 33 மில்லியன் ஆரோக்கியமான வாழ்க்கை ஆண்டுகள் இழக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1,25,000 பேர் இறக்கிறார்கள். உணவு மூலம் பரவும் நோய்ச் சுமையை குழந்தைகள் 40% சுமக்கிறார்கள்...இப்படியாக விரிகிறது தகவல்.
உணவில் கலப்படம் என்பது இருவகை. ஒன்று, தேவையற்ற வேதிப்பொருட்களை கலப்பது. மற்றொன்று அவற்றை தேவைக்கதிகமாக கலப்பது. உணவில் இருந்து ஏதேனும் பொருட்களைச் அகற்றுவதும் கலப்படமே என்கின்றனர் நிபுணர்கள்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கப்படுவது இயல்பு. உப்பில் உள்ள சோடியம் முக்கியமான ஊட்டச்சத்தும் கூட. அதுவே நொறுக்குத் தீனிகளில் தேவைக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு உடல் உபத்திரவங்களுக்கு ஆளாக்குகிறது.
ஓட்டல்களில் உணவின் சுவைக்காக சேர்க்கும் அஜினோமோட்டோ போன்றவற்றில் சோடியம் உள்ளது.
சோடியம் உட்கொள்வது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, 2025 ஆம் ஆண்டிற்குள் சோடியம் உட்கொள்வதை 30 சதவீதம் குறைக்கவேண்டிய தங்கள் இலக்கில் இருந்து உலக நாடுகள் விலகி செல்கின்றன. அது ஆபத்து என்று எச்சரித்துள்ளது.
கலப்பட உணவுக்கு குழந்தைகள் அதிகம் இலக்காவதற்கு அதன் உணவுப்பழக்கமே காரணம். குழந்தைகளை கவரும் வகையில் நொறுக்குத்தீனி, குளிர்பானம், உடனடி உணவு விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றன.
அவற்றை பார்த்துவிட்டு ஷாப்பிங் செல்லும்போது கவர்ச்சிகரமாக பேக் செய்யப்பட்ட அந்த உணவுப் பண்டங்களை கேட்டு குழந்தைகள் அடம் பிடிக்கின்றனர். அவற்றை வாங்கிக் கொடுத்து செல்லம் பாராட்டி அவற்றின் உடல்நலக்கேட்டுக்கு நாம் காரணமாகி விடுகிறோம்.
குழந்தைகளுக்கான உணவு தயாரிக்கும் நிறுவனங்களும் தங்கள் பொறுப்பை உணர்வதில்லை. வணிக லாபத்துக்காக சேர்க்க வேண்டியதை சேர்க்காமலும், சேர்க்கக் கூடாதவற்றை அதிகம் சேர்த்தும் குழந்தைகள் உடல் நலத்துக்கு உலை வைத்து விடுகின்றன.
この記事は Kanmani の October 09, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kanmani の October 09, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
வளைய வரும் போலிகள்!
உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...
காதல் முறிவு....காரணம் என்ன?
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
காதலில் விழுந்தேன்...
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...