19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கு வங்கத்தின் கூச்பெகாரில் மகாராஜா ஜிதேந்திர நாராயணனுக்கும் மராட்டிய இளவரசி இந்திரா ராஜேவுக்கும் பிறந்தவர் இளவரசி காயத்ரி தேவி. உலகின் தலைசிறந்த 10 அழகிய பெண்களில் காயத்ரி தேவியும் ஒருவர் என்று 'வோக்' பத்திரிகை அந்நாளில் புகைப்படம் வெளியிட்டது.
லண்டனில் பள்ளிப் படிப்பை முடித்து சுவிட்சர்லாந்தில் உயர்கல்வி பயின்றவர், போலோ விளையாட்டிலும் குதிரை மீது அமர்ந்து செய்யும் சாகசங்களிலும் சிறந்து விளங்கினார். வேட்டையாடுவது, விலையுயர்ந்த வெளிநாட்டு கார்களை வாங்கி ஓட்டுவது என வீர விளையாட்டுகளிலும் ஈடுபட்டார்.
காயத்ரி தேவி, சவாய் மான் சிங் மகாராஜாவை திருமணம் செய்து கொண்டார். 1965-ல் காயத்ரி தேவியின் கணவரை ஸ்பெயின் தூதராக இந்திய அரசு நியமித்தது. அந்த காலகட்டத்தில் இளவரசி காயத்ரி தேவியின் பார்வை அரசியல் பக்கம் திரும்பியது.
ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதியில் 1962, 1967, 1971ஆகிய தேர்தல்களில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் காயத்ரி தேவி.
அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸில் சேருமாறு காயத்ரி தேவிக்கு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அழைப்பு விடுத்தார். ஆனால் எனக்குக் கொள்கைதான் முக்கியம் என்று கூறி அந்த அழைப்பை நிராகரித்தார் காயத்ரி தேவி.
எமர்ஜென்சி காலத்தில் பிரதமர் இந்திரா காந்தியையும், நெருக்கடி நிலையையும் எதிர்த்ததால், 5 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அரசியலை விட்டு விலகிய காயத்ரி தேவி, சமூக சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
தனது 89-ஆவது வயதில் கூட ஜெய்ப்பூரில் ஆக்ரமிப்புகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அரசியலை விட்டு விலகி இருந்த நிலையிலும்... எம்.பி. தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சிகள் சார்பில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வந்தது. இருந்தும் அந்த வாய்ப்புகளை புறந்தள்ளி விட்டார்.
1976-ல் இவருடைய சுயசரிதை (A Princess Remember) வெளியிடப்பட்டது. ஃப்ராங்கோயிஸ் லெவி இயக்கிய Memoirs of a Hindu Princess என்கிற திரைப்படம் இளவரசி காயத்ரி தேவியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
この記事は Kanmani の November 06, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kanmani の November 06, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.