Andhimazhai - November 2023
Andhimazhai - November 2023
Få ubegrenset med Magzter GOLD
Les Andhimazhai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $9.99
1 År$99.99 $49.99
$4/måned
Abonner kun på Andhimazhai
1 år$11.88 $2.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
சிறப்புப் பக்கங்கள்:
மகிழ்ச்சியைக் கொண்டாடுவது எப்படி?
40 பேரின் வித்தியாசமான அனுபவங்கள்
சிறுகதைகள்: கலாப்ரியா, ஆயிஷா இரா.நடராசன்
நேர்காணல்கள்: ராஜீவ் மேனன், கபிலன்
கதை எழுதி 1900 கோடி சம்பாதித்தவர்!
ஆங்கிலக் கதையுலகின் மாஸ்டரான ஜெப்ரே ஆர்ச்சர் The Traitors Gate என்ற தன்னுடைய புதிய நாவலை வெளியிட்டுள்ளார். லண்டனில் ஹாட்சர்ட்ஸ் என்கிற புத்தகக் கடையில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. பிரிட்டனில் உள்ள மிக வயதான புத்தகக் கடை இது. 1797இல் இருந்து இயங்குகிறதாம்.
1 min
“படம் செத்திருச்சு சார்!”
இயக்குநர் மிஷ்கின் நேர்காணல்
1 min
என்னை மாட்டிவிட்டவர் ஏ.ஆர். ரஹ்மான்!
ராஜீவ் மேனன், இந்தியாவின் மிகச் ஒளிப்பதிவாளர்களின் சிறந்த முன்வரிசையில் இருப்பவர். ஆயிரக் கணக்கான விளம்பரப்படங்களை எழுதி இயக்கியவர். திரைப்பட இயக்குநர், வனவிலங்கு புகைப்படக் கலைஞர், செவ்வியல் இசை ஆர்வலர், பாடகர், திரைக்கலை ஆசிரியர், திரைப்பட நடிகர் எனப் பல முகங்கள் கொண்டவர். அவருடன் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி சென் நிகழ்த்திய உரையாடலில் பகிரப்பட்ட விஷயங்களின் சுருக்கமான எழுத்து வடிவம் இதோ.
1 min
இலக்கற்ற பயணங்கள் 4
சிங்கப்பூரிலிருந்து மூன்று மணிநேர விமானப்பயணத்தில் பாலி தீவைச் சென்று சேரலாம். இந்தோனேசியாவின் 18,100 தீவுகளில் பாலியும் ஒன்று. 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளில் 6000 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்களாம். வழக்கமான கடற்கரைகளிலிருந்து மலைகளும் கடல்களும் இணைந்த நிலப்பரப்புகளைக் கொண்டது பாலி. அதுவே பாலியின் முதன்மையான கவர்ச்சி. மலைகளில் நின்று கொண்டு கடலைப் பார்ப்பதும் கடல் நடுவில் துருத்திக்கொண்டிருக்கும் மனித சஞ்சாரமில்லாத பெரும் பாறைத்திட்டுகளைப் பார்ப்பதும் பெரும் பரவசம் தரும் அனுபவங்கள். பாலி முழுக்க சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும் நகரம் என்று சொல்லலாம்.
1 min
தினந்தோறும் கொண்டாட்டம்!
'கலா சார்தான் முதலில் ஜெயிலர் படம் பார்த்தார். அனியும் நெல்சனும் அவர்கிட்ட படம் எப்படி இருக்குது என்று கேட்டார்கள். அனி, 'சார்... படம் பேட்ட மாதிரி வருமா' என்று கேட்டிருக்கிறார்.
1 min
அந்த அற்புதத் தருணம்!
ஐனவரி, 2005இல் இனி மேக் அப் போட்டு நடிக்கிறது இல்லனு முடிவு செஞ்சேன். 192 படங்கள், பல தொலைக் காட்சித் தொடர்கள் எல்லாம் நடிச்சாச்சு. இனி வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்.
1 min
ஹேப்பி எண்டிங்!
மகிழ்ச்சியான தருணங்களை எப்படி கொண்டாடுவீர்கள் என அந்திமழை ஆசிரியர்கேட்டதும்கொஞ்சம்குழம்பி விட்டேன். பொதுவாக எல்லோருக்கும் எது மகிழ்ச்சியான தருணம் ? அது எப்போது வரும் ? பிறந்தநாள், திருமண நாள்(!?), அலுவலக ப்ரொமோஷன், காதலை ஒத்துக்கொண்ட தருணம், முதன் முதல் புணர்ந்த தருணம், குழந்தை உருவான தருணம், குழந்தை பிறந்த தருணம், சொந்த வீடு வாங்குவது, கார் வாங்குவது என லௌகீகமாக பலரும் சொல்வார்கள்.
1 min
என் சினிமா கதவை திறந்து விட்டவர்கள்!
'பாடல் எழுதுவது ன்னொரு வருக்கு வேலை செய்வது மாதிரி. கவிதை அப்படி அல்ல; அது நம் உயிர். நம்முடனே இருக்கும். நம்முடைய வாழ்க்கையை எழுதுவது.' என தெறிப்புச் சொற்கள் கலந்தபடி பேசுகிறார் பாடலாசிரியர் கபிலன்.
1 min
நாடகமான நான்கு சிறுகதைகள்!
எழுத்தாளர் இமையத்தின் நான்கு சிறுகதைகள் சமீபத்தில் சென்னையில் உள்ள மேடை அரங்கத்தில் நாடக வடிவத் தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. சமீபத்தில் அதிகமாக பேசப்பட்ட அவரது கதைகளில் ஒன்று 'தாலிமேல சத்தியம்'. ஊராட்சித் தலைவர் பதவித் தேர்தலில் வாக்குக்காக தலைக்கு 5000 எனப் பணம் கொடுத்தும் தோற்றுப்போனவன் வீடு வீடாக கொடுத்தப் பணத்தைத் திரும்பக் கேட்கும் அபத்தத்தை கதையாக்கி இருப்பார். இதை மூன்றே பாத்திரங்களை வைத்து இடையிடையே கதை சொல்லல் பாணியில் கதையை நகர்த்திச் சென்று அருமையாக வடிவமைத்திருந்தார் நாடக இயக்குநர் பிரஸன்னா ராமசாமி.
1 min
யானை வெடி
யானை வெடி என்றவுடன் தீபாவளி நினைப்பு உங்களுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. யானை வெடி-1602. இதுதான் நான் என் உதவிக்கு வீட்டில் வைத்திருக்கும் வேலைக்கார - ரோபோட்டின் பெயர். என் வீடு இருப்பது நடுநாட்டில் கள்ளக் குறிச்சிக்கும் விருத்தாசலத்திற்கும் நடுவே கோண்டூர் கிராமம். எங்கள் ஊருக்கு வேலைக்கார ரோபோட் ஒன்றை வீட்டில் வைத்திருப்பது என்பது கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் தனிக்கட்டையாக கல்யாணமே ஆகாமல் தங்கிப்போன சாதாரண ஆரம்பப்பள்ளி ஆசிரியரான எனக்கு ராணுவத்தில் பணியாற்றிய நண்பன் அன்பளிப்பாக கொடுத்தது என்பதால் ஊர் அதிகம் கண்டுகொள்வதில்லை. ஊர் முழுக்க கடன். என்னால் எதையும் விலைபோட்டு வாங்க முடியாது என்று ஊருக்கே தெரியும்.
1 min
Andhimazhai Magazine Description:
Utgiver: Dream serve network private limited
Kategori: Entertainment
Språk: Tamil
Frekvens: Monthly
அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது
- Kanseller når som helst [ Ingen binding ]
- Kun digitalt