CATEGORIES
Kategorier
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்
கும்மிடிப்பூண்டி, அக். 2: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதிக்கு ஆத்துப் பாக்கம், மாதர்பாக்கம், வலுதலம்பேடு, புதூர், ரெட்டம்பேடு, ஆரம்பாக்கம், மங்காவரம், பொன்னேரி, தேவம்பேடு, பட்டுப்புள்ளி, அப்பாவரம், மேலகழனி, நத்தம், தேர்வழி, அயநெல்லூர், பெத்தி குப்பம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், ஓபசமுத்திரம் உள்ளிட்ட 150 கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்கள் தேவைக்கு கார், லாரி, இருசக்கர வாகனங்கள் மூலம் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்
கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்
மணலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக மணலி பகுதி முழுவதும் சிறிய, பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்
மாவட்ட அளவிலான 'தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா திருவள்ளூரில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் த.பிரபு தலைமை தாங்கினார்.
புதிய டிரான்ஸ்பார்மர்கள்
செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர், நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஆட்டம் தாங்கள் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
பழவேற் காடு மீனவப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு சுய தொழில் மூலம் வாழ்க் கையில் முன்னேறுவதற்கு சுய தொழில் பயிற்சிகள் இந்தியன் வங்கி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது
திரு வள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்
செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர்.
அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வட்டாட்சியர் உறுதி
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக புதிதாக 600க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளது.
நூலக வாசகர் வட்ட கூட்டம்
மதுராந்தகம், அக்.2: மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள முழு நேர கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடைபெற்றது.
பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி வேண்டும்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், பள்ளிக்கு செல்ல பேருந்து வசதிக்கேட்டு, பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.
தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டில் விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில், தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட துணை கலெக்டர் நாராயண சர்மா தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு சிஎஸ்ஆர் மூலம் ~400 கோடி நிதி
வாலாஜாபாத், அக். 2: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளிக்கல்வித்துறைக்கு சிஎஸ் ஆர் திட்டத்தின் மூலம் நிதி 7400 கோடியை தாண்டியுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
சாலை விரிவாக்கம் செய்வது எப்போது?
மதுராந்தகம், அக்.2: செங்கல்பட்டு முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துக்களை தவிர்க்க சாலையை விரிவாக்கம் செய்வது எப்போது என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
போலி ஆவணம் தயாரித்து *4 கோடி மோசடி
அட்டை கம் பெனியை பார்த்துக்கொள்ளுவதாக கூறி போலி ஆவணம் தயார் செய்து 4 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாராகவும், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறி வரும் பூங்கா
திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி பூங்கா பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்
மணலியில் பாதாள சாக்கடை பணிக்காக 16 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மாற்றுப்பாதையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
தாம்பரம் மாநகராட்சியில் 102 சாலைப்பணிகள் நிறைவு
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இது வரை 102 சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தாழ்வான பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்
சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தனிக்கவனம் செலுத்தி கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
கேரள கவர்னர் ஆடையில் தீ பிடித்ததால் பரபரப்பு
கேரள மாநிலம் பாலக்காடு அருகே அகத்தேதரை பகுதியில் சபரி ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் 100வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தது
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. 3வது மற்றும் இறுதி திகட்ட தேர்தலில் 65.48 சதவீத வாக்குகள் பதிவாகின. வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வங்கதேசத்தை ‘ஒயிட்வாஷ்' செய்தது இந்தியா
வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி 'ஒயிட்வாஷ்' செய்தது.
காலில் குண்டு பாய்ந்ததில் கோவிந்தா படுகாயம்
பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் படுகாயம் அடைந்தார்.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்...
பலியாகினர் இதற்கு பதில் டியாக மத்திய இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியது. மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சைரன்கள் ஒலித்தபடி இருந்தன.
மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி ஒத்திகை
இந்திய விமானப்படையின் 92ம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் நேற்று போர் விமான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.