CATEGORIES
Kategorier
திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை - மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் மடிப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
தாம்பரம் மாநகராட்சிக்கு ₹43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு கலப்பட விவகாரம் எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? - நடிகர் பிரகாஷ்ராஜிக்கு பவன்கல்யாண் கேள்வி
திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்த நிலையில், எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? இதுதான் நீங்கள் பேசும் மதச்சார்பின்மையா? என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதற்காக ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த 22ம் தேதி சிறப்பு பூஜை செய்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், 11 நாட்கள் பரிகார தீட்சை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் ‘இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு 7 மாத சிறை?
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஊழல் வழக்கில் சுமார் 7 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கருதப்படுகின்றது.
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூர்யா பதவியேற்பு - நாடாளுமன்றம் கலைப்பு நவம்பர் 14ல் தேர்தல்
இலங்கையின் 3வது பெண் பிரதமராக ஹரிணி அமரசூர்ய நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
மோதலுக்கு தீர்வு சமாதான பேச்சுவார்த்தை உக்ரைன் ரஷ்யா போருக்கு தீர்வு காண இந்தியா அர்ப்பணிப்புடன் உதவும்
உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி மீண்டும் உறுதி
ரயில்கள் தடம் புரண்டதில் ரயில்வே உலக சாதனை - மம்தா கேலி
ரயில்கள் தடம் புரண்டதில் இந்திய ரயில்வே உலக சாதனை படைத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா கேலி செய்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 1 லட்சத்து 7 ஆயிரத்து 821 பேருக்கு பட்டங்கள்
சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழாவில் ஒரு லட்சத்து 7,821 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது ஆண்டு பட்டமளிப்பு விழா அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார்.
காசா, உக்ரைன், சூடான், லெபனான் போர்கள் மூலம் 3ம் உலகப்போர் ஏற்படலாம் ஐநா கூட்டத்தில் உலகத்தலைவர்கள் அச்சம்
காசா, உக்ரைன், சூடான், மத்திய கிழக்குப்பகுதி மோதல்கள் மூலம் 3ம் உலகப்போர் ஏற்படலாம் என்று ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உலகத்தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
ஐசிசி மகளிர் டி20 கோப்பையை வெல்வோம்...உலக கேப்டன் ஹர்மன்பிரீத் நம்பிக்கை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் மகளிர் உலக கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
மிலிந்த் குமார் 155* ரன் விளாசினார் அமீரகத்தை வீழ்த்தியது அமெரிக்கா
நமீபியாவில் நேற்று நடந்த ஐசிசி ஆண்கள் உலக கோப்பை லீக்-2 போட்டியில் அமெரிக்கா 136 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலே இலக்கு கான்பூர் டெஸ்டிலும் கலக்குமா இந்தியா?
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் 4 வெற்றிகளே தேவை என்ற நிலையில், வங்கதேச அணியுடன் கான்பூரில் நடக்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வெற்றி முனைப்புடன் தயாராகிறது.
திருப்பதி லட்டு விவகாரம் மன்னிப்பு கேட்டார் கார்த்தி
திருப்பதி லட்டு கலப்படம் விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் கார்த்தி.
ஐரோப்பிய கார் சாம்பியன்ஷிப் ரேஸில் பங்கேற்கிறார் அஜித்
இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்த அஜித், அடுத்த கட்டமாக உலகம் முழுவதும் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
அதிமுகவில் உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - எடப்பாடி அறிக்கை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பக்கத்து வீட்டுக்காரருடன் காம்பவுண்ட் சுவர் பிரச்னை நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு - ஐகோர்ட் உத்தரவு
மதில்சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி போலீசில் புகார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்பு 18 ஆண்டு கால திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
பழச்சாறில் சிறுநீர் கலந்ததாக சர்ச்சை உ.பி.யில் உணவகங்களில் சிசிடிவி கட்டாயம் முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு
உத்தரப்பிரதேசத்தில் உணவகங்களில் சிசிடிவி பொருத்துவதை கட்டாயமாக்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு தொடர ஆளுநரின் அனுமதிக்கு எதிரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு
காங்கிரஸ் மூத்த தலைவரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை வீட்டுமனை திட்டத்திற்கு பயன்படுத்தியதற்காக மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (மூடா) ஒதுக்கியிருந்தது.
ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு 2 போலீசாரை கொன்ற ரவுடி சுட்டுக் கொலை - உத்தரபிரதேச போலீஸ் அதிரடி
மதுபான கடத்தலை தடுத்த போது ஓடும் ரயிலில் 2 கான்ஸ்டபிள்களை தள்ளிவிட்டு கொன்ற ரவுடியை உத்தரபிரதேச போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
நடிகை பலாத்கார வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் முகேஷ் கைது தலைமறைவான நடிகர் சித்திக்கை பிடிக்க போலீசார் தீவிரம்
மலையாள நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் உள்பட சினிமா கலைஞர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி தாயை ஆபாச படமெடுத்து மிரட்டல் பல லட்சம் ரூபாய், நகை பறித்த பயிற்சியாளர்கள்
மதுரை, அண்ணா நகரை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், விளக்குத்தூண் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து தனியாக தையல் கடை வைத்து வாழ்ந்து வருகிறேன்.
மணல் குவாரி அனுமதி பெற்று தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ₹6.80 கோடி மோசடி அதிமுக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது - தொழிலதிபர் தற்கொலை முயற்சி
மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரைப் பயன்படுத்தி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குவாரி உரிமையாளரிடம் ரூ.6.80 கோடி மோசடி செய்தது தொடர்பாக, மதுரை அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
7 வயது மகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை
அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
மாணவி கூட்டு பலாத்கார புகாரில் உண்மையில்லை - திண்டுக்கல் எஸ்பி பேட்டி
தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், திண்டுக்கல் ரயில்நிலைய பாதுகாப்பு பணி போலீசாரை நேற்று முன்தினம் காலை சந்தித்து, தன்னை தேனி பழைய பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத மர்மநபர்கள் காரில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.
நிதி நிறுவனம் ₹250 கோடி மோசடி சேர்மன், நிர்வாக இயக்குநர் கைது - 2 வீடுகள், 4 ஆபீஸ்களுக்கு சீல்
அதிக வட்டி கொடுப்பதாக ஆசைகாட்டி, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
தேசிய பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் ஏற்க தயார் மதுக்கடைகளை குறைக்க பட்டியல் தயாரித்துள்ளோம் - அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை குறைக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று ஈர்த்து வருகிறார் அதிகாரிகளின் பொறுப்பின்மையால் திரும்பி போகும் முதலீட்டாளர்கள் - ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை
தமிழ்நாடு முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதிகாரிகளின் பொறுப்பின்மையால் முதலீடு செய்வோர் திரும்பி செல்கின்றனர்’ என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து சினிமா இயக்குனர் மோகன் ஜி கைது
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றி கொழுப்பு, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று பதக்கம் பெற்றார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு பசுமை கட்டிடத்திற்கான இந்திய பசுமைக் கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று வழங்கப்பட்டது.