ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டுதான் தன் அன்றாடத்தை துவக்கி இருந்தாள். ஈரமும், மெல்லிய குளிருமாய் இருந்த காலைவேளையில் எங்கிருந்தோ இசை தப்பாமல் கேட்ட புறச்சத்தமும், ஒரு மெல்லிய புன்முறுவலைப்போல் சிறகுகளை சோம்பலாய் விரித்துக்கொண்டு பறக்க எத்தனித்த பறவைகளின் கிரீச்சிடலும், சங்கீதம் போல் அவளை தாலாட்டிக்கொண்டு இருந்தது.
கீசரை ஆன் செய்துவிட்டு அடுக்களைக்கு வந்தவள், ப்ரிட்ஜைத் திறந்து என்ன இருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தாள்.
இன்றைக்கு சீக்கிரமே சென்றாக வேண்டும். இரண்டு வேளைகளுக்கு பார்த்து பார்த்து சமைக்கவெல்லாம் அவளுக்கு நேரமில்லை. அப்படியே இருந்தாலும் பெரிதாய் உணவின் மீது நாட்டமெல்லாம் இருப்பவளும் அல்ல. பசிக்கு உண்ண ஆரம்பித்த பிறகு ருசிக்கு உண்ணுகின்ற லயிப்பெல்லாம் கையை விட்டு போய் வெகு காலமாகிறது.
காலைக்கு மேகியோடு முடித்துக் கொண்டு மதியத்துக்கு கேன்டினில் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவுடன் அத்தனை ஆசுவாசமாக இருந்தது மனசுக்கு.
சமைத்து முடித்து, பாத்திரங்களை ஒழித்து ஒரு பெரிய அங்கலாய்ப்பில் இருந்து விடுதலை. மிச்சப்படுத்திய சொச்ச நிமிசத்தில் இருந்து கூடுதலாய் ஐந்து நிமிடத்தை தரவிறக்கம் செய்து குளியலறையில் கண்களை மூடி நின்று செலவழித்தாள்.
இருபத்தி ஏழு வருசத்துக்கு இந்த சோம்பேறித்தனம் கொஞ்சம் கூடுதல் டோஸ் தான் என்றாலும், வேறு எதுவும் செய்ய முடியாது அவள் வாழும் இந்த சூழ்நிலைக்கு.
ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் செங்கல்பட்டு கிளையின் முதன்மை அதிகாரியாக இருந்தாள். அவள் வேலைக்கு அமரும் போது சென்னைக் கிளையில் தான் வேலைக்கு அமர்ந்தாள். அவளின் திறமையும், தனித்தன்மையும் புதுக்கிளைக்கு அவளை முதன்மை அதிகாரியாக மாற்ற, மறுக்க முடியவில்லை இந்த மாற்றத்தை.
Denne historien er fra May 10, 2023-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 10, 2023-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
எத்தனை 94 மனிதர்கள்?
எங்கள் நகரத்தைப் பற்றிய வரலாற்று மற்றும் சமகாலத் தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணம் தீபாவளி
தீபாவளி அன்று நரகாசுரனை விஷ்ணு பகவான் வதம் செய்ய சென்றபோது, அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.
ரகுல ப்ரீத் சிங்!
நடிகையாக வேண்டும் என்று கண்ட கனவு இன்று தான் இருக்கும் இடத்தை கொடுத்திருப்பதாக கூறும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு இந்த தீபாவளி தலை தீபாவளி.
வாரணாசியில் முழு நிலவு நாள்!
நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் தீபத்திருநாளை வேறு விதத்தில் சிறப்பான முறையில் கொண்டாடுகின்றனர்.
ஒருதலை காதலால் உருவான மாப்பிள்ளை யுத்தம்!
மன்னர்கள் கடவுளராக வணங்கப்பட்டது மறுக்கத்தக்கதல்ல. அப்படி ஒரு மன்னனைத்தான் தென் மாவட்டங்களாம் குமரி, திருநெல்வேலியில் குல தெய்வமாக வணங்கிவருகின்றனர். அவன் தான் குலசேகரன்.
மெல்ல மெல்ல.மறந்துபோன தலை தீபாவளி!
நம் மண்ணுக்கு என சில பாரம்பரியங்கள் உள்ளன. அவை வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கின்றன. அப்படி ஒரு நடைமுறைதான் தலை தீபாவளி.
அம்மா பொருத்தம்
இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா! பத்து பொருத்தமும் பொருந்தியிருக்குடா கேசவ்! இந்த வரனைப் பார்த்தா என்ன?\" அம்மா ஜானகி கேட்க, கேசவ் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
அரசியல், சினிமாவில்....இளவரசிகள்!
இளவரசி போல வாழ வேண்டும் என்று விரும்பாத பெண்களே கிடையாது. ஜெய்பூர் அரச குடும்பம், நவாப் குடும்பம் என நிஜ வாழ்க்கையில் இளவரசிகளாக இருந்தும், சமூக அக்கறையுடன் செயல்படும் ரியல் இளவரசிகளை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
சோபிதா நலங்கு!!
நடிகை சோபிதா துலிபாலா தென்னிந்திய திரையுலகில் அடுத்த ஹாட்டாபிக், நட்சத்திர ஜோடியான நாக சைதன்யா சோபிதா துலிபாலாவின் திருமணம் தான்.
ஏற்றம் தரும் திருமலை நம்பி கோயில்!
வாழ்வில் திருப்பம் வேண்டுமென்றால் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்பார்கள்.