அடுத்ததாக நானும், டி.என்.பாலுவும் உருவாக்கிய கதையை (‘நான்’ படம்) ‘படத்தில் மக்களுக்கான மெஸேஜ் இல்லை’ என்பதால் நிராகரித்தார்.
அதனால்... ‘மக்கள் திலகத்தின் மனசைக் கவர்கிற ஒரு கதையை எழுதியே ஆகவேண்டும்’ என ஒரு தீவிரத்தில் இயங்கினேன். டைரக்டர் சாணக்யாவிடம் ஒரு ஹிந்திப் படத்தின் பாதிப்பில் உருவான கருவைச் சொன்னேன்.
“நல்லாருக்கு. ஆனா டாகுமெண்ட்ரி ஃபிலிமுக்கான கதை மாதிரி இருக்கு. இந்தக் கதைக் கருவை வைத்தே பக்காவான கமர்சியல் கதையா உருவாக்க முடியுமான்னு பாரு” என்றார்.
அந்தக் கதைக் கருவை முழு கதையாக்கினேன். திருப்தியாக இருந்தது. ஆனால், திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்துவது கடும் சவாலாகவே இருந்தது. நீங்கள் நம்புவீர்களோ, மாட்டீர்களோ... உண்மை என்னன்னா, அந்த ஒரு கதைக்கு 30 விதமா திரைக்கதை எழுதினேன். ஆனாலும் எனக்கு திருப்தி வரவில்லை. ஒரு படைப்பு என்பது முதலில் அதை படைத்த திருப்திபடுத்தவேண்டும். அப்படியான படைப்புதான் மற்றவர்களை திருப்திபடுத்தும்.
சுமார் ஐந்தாறு மாதங்கள் அந்தக் கதையோடு போராடினேன். ஜே.ஆர்.முவீஸ் மாடியில் இருந்த பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அறைக்குள் உட்கார்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தேன். சதா சதா சிந்தித்துக்கொண்ட எனக்கு, சாதா ஸீன்களே மனசில் தோன்றிக்கொண்டது.
மருத்துவ வசதியே இல்லாத ஒரு மலைக்கிராமத்துக்கு வரும் ஒரு டாக்டர் பற்றிய கதை. கதையின் அம்சம் சிறப்பானது என்றாலும், கதைப்போக்கு வறட்சியாக இருந்தது. அதனால் சிந்திக்கும் முறையை மாற்றினேன்.
அந்த மலைக் கிராமத்துக்கு டாக்டர் எப்படிச் செல்கிறார்?
இப்படி ஒரு கேள்வியை எனக்குள் எழுப்பினேன். இந்தக் கேள்விக்கு விடை தேடியதில் 6 மாதங்களுக்குப் பின் பதில் கிடைத்தது.
Denne historien er fra September 07 - 10, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 07 - 10, 2024-utgaven av Nakkheeran.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.