கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராகவும், அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட வழக்கை முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போபோது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் உட்பட மொத்தம் 47 முக்கிய நபர்கள் மீது பிரதான குற்றச்சாட்டு உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியங்களாக உள்ளனர்.
Denne historien er fra September 27, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 27, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
துணை முதல்வர் பிறந்தநாள் பளுதூக்கும் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவள்ளூர் நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பளு தூக்கும் போட்டி நடந்தது.
கானா பாடகி இசைவாணி இயக்குனர் ரஞ்சித் மீது புகார்
மேடை நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சுருட்டப்பள்ளி, தேவந்தவாக்கத்தில் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா
சுருட்டபள்ளி, தேவந்தவாக்கத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால் கறவை மாடுடன் பால் வியாபாரி பலி
பொன்னேரி அருகே, மின் சாரம் பாய்ந்து கறவை மாடுடன் பால் வியாபாரியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண் குழந்தைகள் ஆகியோரின் நலனுக்காக தமிழ் நாடு அரசு கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மூலம் மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
3 மற்றும் 5வது மெட்ரோ வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில் பெட்டிகள் தயாரிக்க F3,657 கோடியில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஏற்பு கடிதம் பி.இ.எம்.எல் நிறுவனத்திற்கு 3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட ₹25 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பறிமுதல்
ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, கூல் லிப் உள்ளிட்டவை மூட்டை மூட்டையாக மினி வேனில் தமிழகத்திற்கு கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தங்கைக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
அதிக கடன் சுமை காரணத்தால் தங்கைக்கு தகவல் தெரிவித்துவிட்டு வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப பலி
கும்மிடிப்பூண்டி அருகே 15 வயது சிறுவன் காணாமல்போன விவகாரத்தில், கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.