471 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜியின் அரசியல் நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம் வந்த செந்தில் பாலாஜி கடந்த 2014ம் ஆண்டு, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சிக்கினார். 2015ம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் செந்தில் பாலாஜி பெயர் இடம்பெறவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 40 பேர் மீது 2016ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பண மோசடி தொடர்பாக செந்தில் பாலாஜி மீது கடந்த 2016ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமரசம் ஏற்பட்டதால் பணம் கைமாறியது உறுதியாகிறது என்றும் இதனால் மீண்டும் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு கடந்த 2019ல் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறையால் அனுப்பிய இந்த சம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
Denne historien er fra September 27, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 27, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஏழுமலையான் கோயில் அருகே அரசியல் பேச்சுக்கு தடை
திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையின் புனிதத்தையும், ஆன்மிக சூழலை காக்கும் வகையில் திருமலையில் அரசியல் மற்றும் வெறுப்பு பேச்சுக்களை தடை செய்ய தேவஸ்தான அறங்காலர் குழு முடிவு செய்துள்ளது.
வயநாடு தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டம் பாஜவுக்கு அரசியல் மரியாதை தெரியாது
பாஜவுக்கு அரசியல் மரியாதை தெரியாது என்று வயநாடு தொகுதியில் நேற்று நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பிரியங்கா காந்தி எம்பி பேசினார்.
பாம்புக்கடி பாதிப்பை அரசுக்கு தெரிவிப்பது கட்டாயமாகிறது
பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் பாம்புக்கடி பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்பை அரசுக்கு தெரிவிக்கக்கூடிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அவசர கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளது.
அதிரடியாக இறுதிக்குள் நுழைந்த சிந்து
ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, லக்னோவில் நேற்று நடந்த சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 டோர்னமென்ட் பேட்மின்டன் அரை இறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனை உன்னதி ஹூடாவை நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டியில் அதிரடியாக நுழைந்தார்.
இலங்கையுடன் முதல் டெஸ்ட் போட்டி 233 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடந்த முதல் டெஸ்டின் 4ம் நாளான நேற்று, இமாலய வெற்றி இலக்குடன் 2ம் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
தோல்வியின் விளிம்பில் நியூசி.
நியூசிலாந்துடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 499 ரன் எடுத்தது.
இந்து மத துறவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வங்கதேச வக்கீல் கொலையில் 9 பேர் கைது
வங்கதேசத்தில் இந்து மத துறவி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் பணப்பட்டுவாடா நடந்தது
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதஅளவில் பெருமளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்றும், பெருமளவில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்றும் சரத் சந்திரபவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார். சட்டப்பேரவை தேர்தலின் போது மகாராஷ்டிராவில் பெருமளவில் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்திருப்பதாகவும், வாக்கு இயந்திரங்களுக்கு பதில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை அமல் செய்ய வேண்டுமெனவும் கோரி, 93 வயது சமூக ஆர்வலர் டாக்டர் பாபா ஆதவ், புலேவாடாவில் 3 நாள் போராட்டத்தை தொடங்கியுள்ளார். சரத் பவார் அவரை சென்று பார்த்தார்.
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகரின் மனைவி கைது
போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகரின் மனைவி ஃபாலன் குலிவாலாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
தொழில் முதலீடு என்று கூறி பணம் வசூலித்து தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி ெசய்த நபர் மீது விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.