இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் நேற்று விண்ணதிர விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான 72 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விண்ணில் பறந்து மக்களை பிரமிப்புக்கு உள்ளாக்கும் வகையில் சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டின. 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இந்திய விமானப்படை சார்பில் நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சி என்பதால், 15 லட்சம் மக்கள், மெரினா கடற்கரைக்கு திரண்டு வந்து, சாகசங்களை கண்டு வியப்படைந்தனர்.
மெரினாவில் நடந்த இந்த சாதனை நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து கண்டு களித்ததால், இந்த சாதனை நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக டெல்லியில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறிப்பாக, உலகின் நீண்ட கடற்கரையில் ஒன்றான மெரினாவில் இந்த சாகச நிகழ்ச்சியை நடத்த இந்திய விமானப்படை திட்டமிட்டது. கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர், 2003ம் ஆண்டு தமிழகத்தில் இந்த போர் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது 2024ம் ஆண்டு பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடத்த இந்திய விமானப்படை திட்டமிட்டது. இதற்காக கடந்த 3 நாட்களாக ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பறந்து வந்து, சென்னையை திக்குமுக்காடச் செய்தன. இந்த ஒத்திகை நிகழ்ச்சியையும் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Denne historien er fra October 07, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 07, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.