சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் மூலமாக தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பணி நிமித்தமாக சென்னை சென்று வருகின்றனர். இதில், பள்ளி-கல்லூரி மாணவ – மாணவியர், பொதுமக்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், அவரின் உறவினர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் அடங்குவர். இந்த மின்சார ரயில் பயணம் என்பது பேருந்து போக்குவரத்தை விட மிக எளிதானது, கட்டணம் குறைவானது, பயண நேரமும் குறைவானது.
இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற காரணங்களால் பேருந்து போக்குவரத்தை விட இந்த ரயில் போக்குவரத்தை, மிக அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செங்கல்பட்டு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் பயணிக்கும் மக்கள் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை. செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர், பவுஞ்சூர், கடப்பாக்கம், அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் தினந்தோறும் இந்த பகுதிகளிலிருந்து பேருந்துகள் மூலமாகவும் அல்லது இருசக்கர வாகனத்தின் மூலமாகவும் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை சென்று அங்கிருந்து மின்சார ரயில் பிடித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
Denne historien er fra October 21, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 21, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவால் மாணவர்கள் மயக்கம்
திருவொற்றியூர், திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் நேற்று விஷவாயு கசிந்ததால் சில மாணவிகள் மயக்கம் அடைத்தனர்.
புழல் கதிர்வேடு பகுதியில் 78.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு
புழல் கதிர்வேடு பகுதியில் மாநகராட்சி சார்பில் 78.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு திறந்து வைத்தார்.
பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 72.65 கோடியில் திட்ட பணிகள்
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் 72.65 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குண்டும், குழியுமான பென்னலூர் சாலை
பென்னலூர் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருப்போரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து வசதியின்றி அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பிய மக்கள் பேருந்து வசதியின்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாறுபட்ட ரத்தப்பிரிவு இருந்தபோதிலும் நோயாளிக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை
36 வயதான நோயாளிக்கு மாறுபட்ட ரத்தப்பிரிவு, அதிகரித்த எதிர்புரத அளவுகள் இருந்தபோதிலும் சிறுநீரக மாற்று சிகிச்சையை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட 406.55 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அழிப்பு
தீபாவளி கொண்டாட்டித்தின்போது சென்னை மாநகராட்சியில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு எரியூட்டி அழிக்கும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
கொளத்தூரில் ரேஷன் கடைகளை திறந்து வைத்து பொருட்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் ரேஷன் கடைகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பொருட்களை வழங்கியதுடன், மேலும் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கினார்.