கும்பகோணம் கூட்டத்திலும் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் மோதி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள், ஏம்எல்ஏக்கள் பங்கேற்று வருகின்றனர். நெல்லையில் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதி கள ஆய்வு கூட்டம் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வரகூர் அருணாசலம், முன்னாள் எம்எல்ஏ சிவசாமி ஆகியோர் கள ஆய்வு பணிக்காக சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளரும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான பாப்புலர் முத்தையா பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட குறைந்த ஓட்டுகளே வாங்கி உள்ளோம். கடந்த வாரம் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் பல வார்டுகளில் அதிமுக நிர்வாகிகள் யாருமே இல்லை என்பதை நான் பார்த்தேன். மாவட்ட செயலாளர் சேலத்திற்கு சென்று விட்டார். அவர், வேறொரு நாளில் சேலத்திற்கு சென்று இருக்கலாம். பூத் கமிட்டிக்கு 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வாக்காளர் சேர்ப்பு முகாமில் யாருமே இல்லாதது வருந்தத்தக்கது என்று பேசினார்.
இவ்வாறு அவர் பேசியதும், மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து பாப்புலர் முத்தையாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அமமுகவிற்கு சென்று வந்தவர்கள் எல்லாம் பேசுவதற்கு அருகதை கிடையாது என்று கூறினர். இதனால் பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களுக்கும், மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கூட்டம் போர்க்களம் போல் காட்சியளித்தது. கூட்டத்தில் நிர்வாகிகள் மோதலை பார்த்து அதிர்ச்சியடைந்த மாஜி அமைச்சர் வேலுமணி, தகராறு செய்பவர்கள் வெளியே செல்லலாம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மைக்கில் எச்சரிக்கை விடுத்தார்.
Denne historien er fra November 23, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 23, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் அடங்காத காட்டுத்தீ பலி 16 ஆக அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக லாஸ்ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
புழல் அருகே காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா 10,000 பெண்களுக்கு சேலை செல்வப்பெருந்தகை வழங்கினார்
புழல், ஜன.13: மாதவரம் மண்டலம் 31வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 10,000 பெண்களுக்கு காங்கிரஸ் சார்பில் சேலைகள் வழங்கும் விழா, புழல் கதிர்வேடு அடுத்த அம்பாள் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் 31வது வார்டு மாநகராட்சி கவுன்சிலரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சங்கீதா பாபு தலைமை தாங்கினார்.
அத்திப்பட்டு ஊராட்சியில் பொங்கல் விழா 6,000 அட்டைதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பொன்னேரி, ஜன.13: மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் உள்ள 6,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு சமத்துவ பொங்கல் தின நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 400 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது
ஆலந்தூர், ஜன.13: வெளி மாநிலத்தில் இருந்து சைதாப்பேட்டை வழியாக காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக பரங்கிமலை துணை கமிஷனருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
கலைஞர் நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக் ஏற்பாட்டில் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டியில் 2500 புத்தகங்கள் அடங்கிய கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை மகிழ்விக்க இன்னிசை கச்சேரி
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான அரசு விரைவு பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன.
பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிட வேண்டும் - அன்புமணி கோரிக்கை
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரியூலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறது.
டைடல் பார்க் அருகே ₹108.13 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘யு' டர்ன் மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு -நெடுஞ்சாலைத்துறை தகவல்
பல மாதங்களாக காத்திருந்த டைடல் பார்க் சந்திப்பு 'யு' டர்ன் மேம்பாலம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸி ஓபன் டென்னிஸ் முதல் நாளில் வெற்றிக் கொடி நாட்டிய ஆண்ட்ரீவா, சபலென்கா இந்தியாவின் சுமித் நாகல் ஏமாற்றம்
இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் நேற்று, ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா அற்புதமாக ஆடி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஹரியானா, விதர்பா
கருண் நாயர் 122 ரன் குவிப்பு