பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்து ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் ஹரிஹர் என்ற இந்து கோயில் இருந்ததாகவும், முகலாய பேரரசர் பாபரால் 1529ல் அந்த கோயில் இடிக்கப்பட்டதாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்கு சென்றனர். அங்கு கூடியிருந்த மக்கள் மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில், மசூதிக்குள் போலீசார் நுழைவதை அந்த கும்பல் தடுக்க முயன்றது. அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அந்த கும்பல் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டது.
இதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். துணை கலெக்டர் காலில் குண்டு பாய்ந்துள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஜமா மசூதி அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இணைய வசதி முடக்கப்பட்டது. வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Denne historien er fra November 26, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 26, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்தனர்
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் 220 பேர் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டி
சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் திமுகவினர் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக பாஜ கள்ளக்கூட்டணியையும் கண்டித்து திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பைக் மீது வாகனம் மோதி விபத்து உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப பலி
பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரசு உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக பலியானார்.
'96' திரைப்பட பாணியில் கவரப்பேட்டை அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘96’ திரைப்பட பாணியில் 1996ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமையும் இடம் ஆய்வு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 200 ரூபாய் பார்க் பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தை வருகின்ற 9ம்தேதி நள்ளிரவில் தொடங்கி 16ம்தேதி வரை நடைபெறுகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் பொங்கல் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பிதழ் - கட்சி நிர்வாகிகளுக்கு சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடைபெறும் பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் மதுவிலக்கு சட்ட விழிப்புணர்வு சுவரொட்டிகள்
மதுராந்தகம் மற்றும் செய்யூரை சுற்றியுள்ள கிராமங்களில் மதுவிலக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டிகள் வரும் பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.