இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், அரசியலமைப்பு மீதான சிறப்பு விவாதம் மக்களவையில் 2 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பதிலளித்து பேசியதாவது. நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம் இது.
நாடு 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும். இந்த மைல்கல்லை எட்ட ஒற்றுமை முக்கியம். எனது அரசின் கொள்கைகளைப் பார்த்தால், நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சித்துள்ளோம் என்பதை காண்பீர்கள். இந்த ஒற்றுமைக்கு 370வது பிரிவு தடையாக இருந்தது. அதனால்தான் அதை நீக்கினோம். ஜிஎஸ்டி மூலம் பொருளாதார ஒற்றுமையைக் கொண்டு வந்தோம். ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை கிடைத்தால் அவர்கள் அதிகாரம் பெறுவார்கள். அதனால்தான் ஒரே நாடு, ஒரே சுகாதார அட்டை கொண்டு வந்தோம்.
அரசியலமைப்பு இன்று 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது, ஆனால் முந்தைய மைல்கற்களைப் பார்த்தால். அரசியல் சாசனம் 25 ஆண்டுகள் நிறைவடையும் போது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்பட்டு, நாடு ஒரு பெரிய சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. எமர்ஜென்சியின் பாவத்தை காங்கிரசின் தலையெழுத்தில் இருந்து ஒருபோதும் அழிக்க முடியாது.
காங்கிரசில் ஒரு குடும்பம் அரசியலமைப்பை புண்படுத்துவதில் எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. 75 ஆண்டுகளில், அந்த குடும்பம் 55 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தது.
1947 முதல் 1952 வரை, நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. இடைக்கால அரசு அமைந்திருந்தது. இதை பயன்படுத்தி 1951ல் அரசியலமைப்பை அவர்கள் மாற்றினர். இது அரசியலமைப்பை உருவாக்கியவர்களை அவமதிக்கும் செயல். அந்த நேரத்தில், ‘அரசியலமைப்புச் சட்டம் நமக்குத் தடையாக இருந்தால், அதில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்’ என்று நேரு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஜனாதிபதியும் சபாநாயகரும் நேருவை எச்சரித்து தடுக்க முயன்றனர். ஆனாலும் அவர் தனது சொந்த அரசியலமைப்பை பின்பற்றினார். அரசியலமைப்பை சீர்குலைக்கும் இந்த பழக்கத்திற்கு காங்கிரஸ் அடிமையாகிவிட்டது.
Denne historien er fra December 15, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 15, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அக்காவுடன் சண்டை சிறுமி தற்கொலை
வில்லிவாக்கம் ராஜாஜி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார்.
வலைகளை உலர்த்த வசதியாக 8 மீனவ கிராமங்களுக்கு மண்டபம்
கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரை உள்ள 13 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாம், அக்கரை கருணாநிதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
வரும் 21ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள்
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழக தெரிவித்துள்ளது.
புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 500 கன அடியாக குறைப்பு
காற்றழுத்த தாழ்வு காரணமாக 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ.428 கோடி மதிப்பீட்டில் 4வது ரயில் முனையம்
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து 4வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
காங். குடும்ப உரிமையாக கருதி அதிகாரத்தில் நீடிப்பதற்காக அரசியலமைப்பை திருத்தியது
இந்தியாவில் அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் கடந்த 13, 14ம் தேதிகளில் விவாதம் நடந்தது.
'பாக்.போரில் இந்தியா வெறும் கூட்டாளிதான்’ பிரதமர் மோடி பதிவுக்கு வங்கதேசம் கண்டனம்
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது
தற்போதைய சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
'பாக். போரில் இந்தியா வெறும் கூட்டாளிதான்' பிரதமர் மோடி பதிவுக்கு வங்கதேசம் கண்டனம்
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.
எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் டி20 சென்னை அணி வெற்றி
சக்கர நாற்காலி மாற்றுத் திறனாளிகளுக்கான ‘எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின்’ 3வது தொடர் பெங்களூர் அருகே உள்ள ஆலூரில் நடந்தது.