சென்னை, கலைவாணர் அரங்கில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நேற்று நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷை, ‘நம்முடைய குகேஷை’ பாராட்டுகிறேன். சீன நாட்டை சேர்ந்த சாம்பியனை வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறார் குகேஷ். புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்முடைய பையன், சென்னை பையன், அதனால்தான் இன்றைக்கு குகேஷை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. இங்கே எதிரே அமர்ந்திருக்கக்கூடிய அவருடைய பெற்றோரைப்போல தான் நானும் மகிழ்ச்சியிலும், பெருமையிலும் இருந்து கொண்டிருக்கிறேன். வெற்றி பெற்றதும் குகேஷ் கொடுத்த ஒரு பேட்டியைப் பார்த்தேன் படித்தேன்.
‘‘விளையாட்டுத் திறமையோடு சேர்ந்து சிறந்த குணம், மன உறுதி ஆகியவையும் இணைந்ததால் தான், இந்த வெற்றி கிடைத்திருக்கிறது’’ என்று அவர் சொல்லி இருந்தார். அவர் சொன்ன விளையாடும் திறன், சிறந்த குணம், மனஉறுதி மட்டுமல்ல எப்போதும் புன்னகையோடு இருக்கும் அவரின் முகமும், விமர்சனங்களை தாங்கும் இயல்பும் தான், அந்த வெற்றிக்கு காரணம், உலகின் இளைய செஸ் சாம்பியனாக மாற வேண்டும் என்ற தன்னுடைய கனவை, தன்னுடைய திறமையாலும், உழைப்பாலும் நனவாக்கியிருக்கிறார். 7 வயதில் பயிற்சிக்குள் நுழைந்து, 9 வயதில் ‘கேண்டிடேட் மாஸ்டர்’ பட்டத்தை வென்று, 12 வயதில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வென்று, இன்று உலக செஸ் சாம்பியன் ஆகிவிட்டார்.
Denne historien er fra December 18, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 18, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
இரட்டை இலை வழக்கு விரைந்து முடிக்க உத்தரவு
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸ் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று பார்க்கிறது
முதலீட்டாளர்கள் முதலில் முதலீடு செய்ய விரும்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று பார்ப்பதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.
தமிழக கோயில்களில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரி வழக்கு
கோயில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரிய வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
உலகின் முன்னணி "நிறுவனங்களின் காலணி உற்பத்தி தொழிற்சாலை
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என உறுதி ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டில் தொழில் துறையை வழி நடத்தி வருகின்றார்.
அதிமுக இருக்கணும் என்றால் பாஜவுடன் கூட்டணிக்கு வரணும்...
அதிமுக பாஜ கூட்டணிக்கு வர வேண்டும் என்று பாஜவின் ஏஜென்டாக மாறி டிடிவி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசுவது, சிந்திப்பதுதான் ஆளுநருக்கும், பாஜவிற்கும் ஒரே கொள்கை நிலைப்பாடு
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
ஈரோட்டில் கள ஆய்வு முதல்வர் நாளை பயணம்
ஈரோட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, மக்கள் நலப்பணிகளை ஆய்வு செய்கிறார்.
போதை பொருள் விவகாரத்தில் இபிஎஸ் பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சாட்சி விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோயிலில் 58 ஏக்கரில் அடிப்படை வசதிகள் செய்ய முடிவு
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதில் சிக்கல்
வங்கக் கடலில் எதிர்த்திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் காரணமாக, வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வருவதில் தாமதம் ஏற்படுகிறது.