விமான நிலையத்தில், ஓடுபாதையில் இருந்து விலகி தடுப்பு சுவரில் விமானம் மோதி வெடித்து சிதறியதில் 179 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விமான ஊழியர்கள் 2 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். பறவை மோதியதால் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து தென் கொரியாவின் முவான் நகரை நோக்கி, ஜெஜூ ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 181 பேருடன் நேற்று காலை 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
முவான் விமான நிலையத்தை விமானம் நெருங்கிய நிலையில், விமானத்தின் மீது பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லேண்டிங் கியர் செயல்படவில்லை. இதனால் வழக்கமான லேண்டிங் சாத்தியமில்லை என்பதால் மாற்று ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்தனர். லேண்டிங் கியர் செயல்படாத போது விமானத்தின் சக்கரங்கள் வெளியில் வராது. இதன் காரணமாக, பெல்லி லேண்டிங் முறையில் விமானத்தை தரையிறக்க விமானி முடிவு செய்தார்.
பெல்லி லேண்டிங் என்பது, விமான சக்கரங்கள் வெளியே வராத சமயத்தில், விமானத்தின் முன்பகுதியை தரையில் உரசி விமானத்தை நிறுத்தும் முயற்சியாகும். மிகவும் சவாலான இந்த முயற்சியுடன் விமானம் மாற்று ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது, விமானம் தரையிறங்கியதுமே கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியபடி ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதி வெடித்து சிதறி தீப்பிடித்தது.தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் விமானம் முழுவதும் தீ பரவியது.
1500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், காவல் துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் விமானம் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. விமானத்தின் வால் பகுதியை தவிர மற்ற அனைத்தும் எரிந்து சாம்பலாகின. மீட்பு முயற்சியின் மூலம் விமானத்தில் இருந்த விமான ஊழியர்கள் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற அனைத்து பயணிகளும் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
Denne historien er fra December 30, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 30, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பாராபேட்மிண்டனில் 2028ல் தங்கம் வெல்வேன்
அர்ஜூனா விருது பெற்ற வீராங்கனை மனிஷா உறுதி
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில் கறி விருந்து
திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு கடைசி கூட்டத்தில், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்க விழா நடைபெற்றது.
நேருவை கொச்சைப்படுத்தி பேச்சு பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும்
மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார்
அதிமுக ஆட்சியில் சிறை துறைக்கு உபகரணம் வாங்கியதில் ₹100 கோடி முறைகேடு 11 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு
உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பார்வையாளர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியலை பார்வையாளர் ஆய்வு நடத்தினார்.
நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
போலீசாருடன் தள்ளுமுள்ளு திருத்தணியில் பெரும் பரபரப்பு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் மு.க.ஸ்டாலின் பெயரில் அரங்கம் திறப்பு பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வை வளமாக்கும் திமுக அரசு
கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதியதாக அமைக்கப்பட்ட அரங்கத்திறப்பு விழாவில் 'பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அடித்தட்டு மக்களின் வாழ்வை திமுக அரசு வளமாக்கி வருகிறது' என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
செல்போன் கடையில் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது
ஸ்ரீபெரும்புதூரில் செல் போன் கடையின் பூட்டை உடைத்து, செல்போன்களை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி 3 வழிப்பாதையாக மாற்றியதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது
பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வரவேற்பு