பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக 5 அரசாணைகள் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும், தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது.
மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின், பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் இவற்றில் அமைந்துள்ளன. இந்த பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகில் உள்ள நகர்ப்புற பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர்.
Denne historien er fra January 02, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 02, 2025-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தை முதல் ஞாயிறையொட்டி திருத்தணி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
திருத்தணி முருகன் கோயிலில் தை மாதம் ஞாயிற்றுக்கிழமை அடுத்த நாளாகிய நேற்று காலை பெய்த திடீர் மழையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது.
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகியைகட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒரு சமுதாய ஓட்டுக்களுக்காகதான் கூட்டணியிலிருந்து அதிமுக விலகல் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
ஒரு சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நேரத்தில் பாஜவை விட்டு அதிமுகவினர் விலகினர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது பொருளாதாரம், நிதி மேலாண்மை குறித்து எடப்பாடிக்கு அடிப்படை புரிதல் இல்லை - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது. பொருளாதாரம் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் எந்த ஒரு அடிப்படை புரிதலும் எடப்பாடிக்கு இல்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
சைப் அலிகானை தாக்கிய வங்கதேச ஆசாமி கைது பெயரை மாற்றி தங்கியிருந்தது அம்பலம்
மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சைப் அலிகான் வீட்டிற்குள் கடந்த கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர், நடிகரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 13 பேரை சோதனையின்றி வெளியே அனுப்பிய சுங்கத்துறை அதிகாரிகள்
விஜிலென்ஸ் தனிப்படை சுற்றிவளைத்தது, கடத்தலுக்கு துணைபோன 4 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சத்தியமூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகே வடிகாலில் குப்பை குவியல் -சீரமைக்க கோரிக்கை
திருவொற்றியூர் மண்டலத்தின் 6வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் மணலி நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
3 பெண் பணய கைதிகள் விடுவிப்பு இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் அமல்
பாலஸ்தீனர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்
டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு சாதகம்
சர்வதேச சந்தையில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 55 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 மில்லியன் சதுர அடியில் புதிய ஐடி பார்க் ஏஐ தகவல் தொழில்நுட்ப பூமியாக மாறும் கோவை
* 20 லட்சம் இளைஞர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க திட்டம், மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.78 கோடியில் 13 ஒப்பந்தங்கள்