‘மணிப்பூரில் இனக் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டன; இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி மெளனம் சாதிப்பது, அவரது முழு அலட்சியத்தை வெளிக்காட்டுகிறது’ என்று எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த எம்.பி.க்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது.
மணிப்பூா் ஆளுநா் அனுசுயா உய்கேவிடம் அளித்த கோரிக்கை மனுவில், மேற்கண்ட குற்றச்சாட்டை எதிா்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.
மணிப்பூரில் அமைதி-நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில், மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இந்த பிரச்னையை முன்வைத்து, இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ஆம் தேதி கலவரம் மூண்டது. அதன் பிறகு நீடிக்கும் வன்முறைகளில் உயிா்ச்சேதங்களும் பொருள்சேதங்களும் நேரிட்டு வருகின்றன.
மணிப்பூா் நிலவரம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக, 26 எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியைச் சோ்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூருக்கு சனிக்கிழமை வருகை தந்தனா்.
Denne historien er fra July 31, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 31, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன் நினைவாக தயாரிக்கப்பட்ட எண்ம அடிப்படையிலான சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.