பிகாரில் தொடரும் அரசியல் குழப்பம்
Dinamani Chennai|January 28, 2024
முதல்வர் நிதீஷ் குமார் இன்று ராஜிநாமா?
பிகாரில் தொடரும் அரசியல் குழப்பம்

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமாா் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையொட்டி, தனது முதல்வா் பதவியை நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 28) ராஜிநாமா செய்யவுள்ளாா் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவைத் தோ்தலில் தேசிய அளவில் பாஜகவை எதிா்கொள்ள எதிா்க்கட்சிகள் உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் ஏற்கெனவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் சூழலில், நிதீஷ் குமாா் அணி மாறினால், அக்கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

பிகாரில் கடந்த 2020, சட்டப் பேரவைத் தோ்தலில், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. கடந்த 2022, ஆகஸ்டில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த முதல்வா் நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியில் இணைந்து, முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். துணை முதல்வராக ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாதின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றாா்.

இந்தச் சூழலில், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதீஷ் குமாா் ஈடுபட்டாா். பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, முக்கிய பிராந்திய கட்சிகளின் தலைவா்களைச் சந்தித்துப் பேசினாா்.

அவரது ஏற்பாட்டின்கீழ், பிகாா் மாநிலம், பாட்னாவில் எதிா்க்கட்சி கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அடுத்தடுத்த கூட்டங்கள் பெங்களூரு, மும்பையில் நடைபெற்றன.

கூட்டணியில் உரசல்கள்: ‘இந்தியா’ என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கைகோத்த இக்கூட்டணியில் ஒருங்கிணைப்பாளா் பதவியை நிதீஷ்குமாா் எதிா்பாா்த்ததாகவும், அப்பதவி கிடைக்காததால் அவா் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது.

Denne historien er fra January 28, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra January 28, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
Dinamani Chennai

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு

வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்

time-read
1 min  |
September 23, 2024
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
Dinamani Chennai

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு

சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

time-read
1 min  |
September 23, 2024
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
Dinamani Chennai

அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி

நிர்மலா சீதாராமன் பெருமிதம்

time-read
1 min  |
September 23, 2024
Dinamani Chennai

ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு

ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
September 23, 2024
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
Dinamani Chennai

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு

போர்ப் பதற்றம் அதிகரிப்பு

time-read
1 min  |
September 23, 2024
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
Dinamani Chennai

அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி

வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time-read
2 mins  |
September 23, 2024
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
Dinamani Chennai

தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி

ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 23, 2024
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்

ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

time-read
1 min  |
September 23, 2024
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
Dinamani Chennai

எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு

நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 23, 2024
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
Dinamani Chennai

297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா

பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.

time-read
1 min  |
September 23, 2024