இத்தேர்தலில் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. மற்ற மாநிலங்களில் பர வலாக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.
வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைப்பதால், வாக்குச்சா வடிகளில் குளிர்ந்த நீர், குளிர்சாதன வசதி, மின்விசிறி, நிழல் கூடாரம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
தற்போதைய மக்களவைத் தேர் தலில் 6-ஆம் கட்டமாக உத்தரபிர தேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகார், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜார்க் கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் 1 என 58 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் 11.13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் (5.84 கோடி ஆண்கள், 5.29 கோடி பெண்கள், 5,120 மூன்றாம் பாலினத்தவர்) வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
முக்கியப் பிரமுகர்கள் வாக்களிப்பு: தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய அமைச்சர்கள் எஸ்.ஜெய் சங்கர், ஹர்தீப் சிங்புரி, முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து உள்ளிட் டோர் வாக்களித்தனர்.
ஹரியாணாவில் பிரபல மல்யுத்த வீரர் யோகேஸ்வர்தத், வீராங்கனைகள் பபிதா போகட், ரித்திகா ஹூடா உள்ளிட்டோர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
Denne historien er fra May 26, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 26, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
மத்திய அமைச்சர் அமித் ஷா
சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு
ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.