கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
மேலும், அவர்களது பெயரில் ரூ.5 லட்சம் வரை வைப்புத் தொகை வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேரமில்லாத நேரத்தில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில், கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஜி.கே.மணி (பாமக), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வீ.நாகைமாலி (மார்க்சிஸ்ட்), நயினார் நாகேந்திரன் (பாஜக), வைத்திலிங்கம் (ஓபிஎஸ் அணி), சதன் திரு மலைக்குமார் (மதிமுக), சிந்தனைச் செல்வன் (விசிக), ராமச்சந்திரன் (இ.கம்யூ.), அப்துல் சமது (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் பேசினர்.
அவரது விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 பேர் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கோவிந்தராஜ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
சட்டரீதியாக நடவடிக்கை: எதிர்கால சமுதாயத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் போதைப் பொருள்களை எந்தவ கையிலும் அனுமதிக்க இயலாது. அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இதுபோன்ற சம்பவம் சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
Denne historien er fra June 22, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 22, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தனி மனிதர்களை நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு
தனி மனிதர்கள் ஒவ்வொருவரையும் நீதிபதியாக மாறறக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதி மன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பேசினார்.
பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி கடன்: உலக வங்கி முடிவு
பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்) கடன் வழங்க உலக வங்கி விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.
ஹிலாரி, சோரஸ், டென்சிலுக்கு அமெரிக்காவின் உயரிய விருது
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், ஹாலிவுட் நடிகர் டென் சில் வாஷிங்டன் உள்பட 19 பேருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
பார்டர் - காவஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா
சிட்னி டெஸ்ட்டில் தோல்வி; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்தும் வெளியேறியது
லாலு கட்சியுடன் கூட்டணி இல்லை: நிதீஷ் குமார்
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நிராகரித்துள்ளார்.
குஜராத்: ஹெலிகாப்டர் விபத்தில் 3 கடலோரக் காவல் படை வீரர்கள் உயிரிழப்பு
குஜராத் மாநிலம், போர்பந்தரில் உள்ள விமான நிலையத்தில், இந்திய கடலோரக் காவல் படையின் (ஐசிஜி) ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு
'அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது, இது விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது' என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் ஊழலை ஒழிப்போம்: பிரதமர் மோடி வாக்குறுதி
'தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முன்தைய மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது; அதேநேரம், அமலாக்கத்தில் நிலவும் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார் எதிர்காலத்துக்கு அவர் தெரிவித்தார்.
சீனாவில் சுவாச நோய்கள் அதிகரிப்பு
உலக சுகாதார அமைப்பிடம் தகவல் கோருகிறது மத்திய அரசு
சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் இரும்புக் காலமும் சமகாலத்தவை
சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் இரும்புக்காலமும் சமகாலத்தவையாக இருப்பதை தொல்லியல் அகழாய்வின் அறிவியல் கணக்கீடுகள் உறுதி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.