இதையடுத்து ‘ஃபாலோ-ஆன்’ பெற்ற அந்த அணி, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் சோ்த்து, 105 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்திய பௌலா்களில் ஸ்நேஹா ராணா 8 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, தென்னாப்பிரிக்காவின் 2-ஆவது இன்னிங்ஸில் சுனே லஸ் சதம் கடந்து பலம் காட்டினாா். கேப்டன் லாரா வோல்வாா்டட் சத்தை நெருங்கியிருக்கிறாா்.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தோ்வு செய்தது. ஷஃபாலி வா்மா 205, ஸ்மிருதி மந்தனா 149, ரிச்சா கோஷ் 86 என வீராங்கனைகளின் அபாரமான ஆட்டத்தால் இந்தியாவின் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது.
ஆட்டத்தின் 2-ஆம் நாளான சனிக்கிழமை, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ரன்களுடன் ‘டிக்ளோ்’ செய்தது இந்தியா. மகளிா் டெஸ்ட்டில் இதுவே ஒரு அணியின் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோராகும். தென்னாப்பிரிக்க தரப்பில் டெல்மி டக்கா் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
Denne historien er fra July 01, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 01, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ரூ.11,650 கோடி கடனை திருப்பி செலுத்திய வோடஃபோன் குழுமம்
இந்திய தகவல் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியாவுக் காக வாங்கிய சுமார் ரூ.11,650 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த வோடஃபோன் குழுமம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்: கடும் கட்டுப்பாடுகள்
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 64,439 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,439.1 கோடி டாலராக சரிந்துள்ளது.
21 சதவீதம் சரியும் வீடுகள் விற்பனை
இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை டிசம்பர் காலாண்டில் 21 சதவீதம் குறையும் என்று சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நிலைகளில் தாக்குதல்: ஆப்கானிஸ்தான்
தங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியது.
வங்கதேசம்: வாக்களிக்கும் வயது வரம்பை குறைக்க பிஎன்பி எதிர்ப்பு
வங்கதேசத்தில் வாக்களிப்போரின் வயது வரம்பைக் குறைப்பது தேர்தலை தாமதப்படுத்தும் என்று முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெங்களூரிடம் வீழ்ந்தது சென்னை (4-2)
ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரிடம் 4-2 என்ற கோல் கணக்கில் தோற்றது சென்னையின் எஃப்சி அணி.
மன்னிப்பு கோரினார் விளாதிமீர் புதின்
பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய சம்பவம் குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மன்னிப்பு கோரினார்.
ஜெயின் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன்
அகில இந்திய பல்கலைக்கழக ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை
கிழக்கு லடாக் கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரை யில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.