எதிர்ப்புக்கு இடையே வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம்
Dinamani Chennai|August 09, 2024
நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரை
எதிர்ப்புக்கு இடையே வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை அறிமுகம் செய்தாா். அதனுடன் முசல்மான் வக்ஃப் சட்டம் 1923-ஐ ரத்து செய்வதற்கான மசோதாவையும் அறிமுகம் செய்தாா்.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, அதை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அவா் பரிந்துரைத்தாா்.

மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்பாக வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா நகல் அவை உறுப்பினா்களின் பாா்வைக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை கூடியதும், இந்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கான அனுமதியை மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கோரினாா்.

அப்போது, இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்க முன்னறிவிப்பை (நோட்டீஸ்) கொடுத்திருந்த பல எதிா்க்கட்சி எம்.பி.க்கள், மசோதா அறிமுகத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். ‘இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி நடைமுறை மீதான தாக்குதல்’ என்று அவா்கள் விமா்சித்தனா்.

மசோதா அறிமுகம்: இந்த எதிா்ப்புக்கு இடையே, மசோதாவை மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு அவையில் அறிமுகம் செய்தாா். பின்னா், எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது:

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா எந்தவொரு மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையீடு அல்லது குறுக்கீடு செய்யாது. அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு பிரிவையும், இந்த வரைவுச் சட்டம் மீறவில்லை. வக்ஃப் வாரிய சட்டம் 1995 அதன் உரிய நோக்கத்தை நிறைவேற்ற இயலவில்லை என்பதன் காரணமாகவே, இந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், காங்கிரஸ் அரசு சாதிக்க முடியாததை இந்த மசோதா பரிந்துரைக்கிறது.

அரசியல் காரணங்களுக்காகவே இந்த மசோதா மீது எதிா்ப்பு தெரிவித்து மக்களைத் தவறாக வழிநடத்த எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. எந்தவொரு சட்டமும் அரசமைப்புச் சட்டத்துக்கு மேலானதாக இருக்க முடியாது. ஆனால், ‘வக்ஃப் வாரிய சட்டம் 1995’ அத்தகைய பிரிவுகளைக் கொண்டிருந்தது.

Denne historien er fra August 09, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 09, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

துணைவேந்தர்கள் நியமனம் தாமதம்; ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

தமிழக பல்கலைக்கழகங்களில் ஆளுநர் குறுக்கீடு செய்வதால் துணைவேந்தர்கள் நியமனம் தாமதமாகுவதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை:

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழக அரசு மேலும் ரூ. 1.50 கோடி நிதி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

மத்திய அரசு பள்ளிகளில் கட்டாய தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: ராமதாஸ்

மத்திய அரசு பள்ளிகளில் 5, 8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை ரத்து செய்யக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
December 25, 2024
தமிழக மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருகிறது
Dinamani Chennai

தமிழக மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருகிறது

தமிழக மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

time-read
1 min  |
December 25, 2024
கன்னியாகுமரி மணல் ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
Dinamani Chennai

கன்னியாகுமரி மணல் ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்

கன்னியாகுமரியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலைக்கான உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

மூளை தண்டுவடக் கட்டி பாதிப்பு: சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்

குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் மூளை தண்டுவடக் கட்டி (ஸ்பைனா பைஃபிடா) பாதிப்புக்கான இலவச மருத்துவ முகாம் சென்னை, தரமணியில் உள்ள விஹெச்எஸ் மருத்துவமனை அபிமன்யு பிளாக்கில் வரும் சனிக்கிழமை (டிச.28) நடைபெற உள்ளது.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து மீட்கப்பட்டன.

time-read
1 min  |
December 25, 2024
Dinamani Chennai

ஐஸ்கிரீம்: ஆவின் சலுகை அறிவிப்பு

பண்டிகை தினங்களை முன்னிட்டு 'மேங்கோ' மற்றும் 'கிரேப் டூயட்' வகை ஆவின் ஐஸ்கிரீம் இரண்டு வாங்கினால் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 25, 2024
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழா தேரோட்டம்
Dinamani Chennai

அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழா தேரோட்டம்

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
December 25, 2024
வெம்பக்கோட்டை அகழாய்வில் உருண்டை வடிவ பீங்கான் மணி
Dinamani Chennai

வெம்பக்கோட்டை அகழாய்வில் உருண்டை வடிவ பீங்கான் மணி

வெம்பக்கோட்டை 3-ஆம் கட்ட அகழாய்வில் பழங்காலத்து சோடினை பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களாலான நீள்வட்ட வடிவ மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.

time-read
1 min  |
December 25, 2024