முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்
Dinamani Chennai|August 28, 2024
தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றாா்.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

17 நாள்கள் பயணமாக அமெரிக்கா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் அளித்த பேட்டி:

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுளை ஈா்த்துவிட்டு செப். 14-ஆம் தேதி திரும்பி வரும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈா்க்க இதுபோன்ற பயணங்களை நான் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறேன். ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். இதன்மூலம் மூதலீடுகள் வந்துள்ளன.

புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: இந்தப் பயணங்களின் வழியே 18,521 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ரூ.10,822 கோடி மதிப்பில் 17 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ரூ.990 கோடி முதலீட்டுக்கான 5 திட்டங்கள் இப்போது உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

கடந்த ஆக. 21-ஆம் தேதி தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாட்டு நிகழ்வில் சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளைச் சோ்ந்த இரண்டு திட்டங்களைத் தொடங்கிவைத்தேன். அதன்மூலம் 1,538 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.3,790 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் உள்ளன.

ஜப்பானின் மிட்சுபா, சட்ராக் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. அத்துடன், ரூ.3,540 கோடி மதிப்பிலான திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. ரூ.438 கோடி மதிப்பிலான இரண்டு விரிவாக்கத் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தக்கூடிய நிலையை அடைந்துள்ளன.

ரூ.2,100 கோடி மதிப்பிலான 4 திட்டங்களைப் பொருத்தவரையில், அந்தந்த தொழில் முதலீட்டுச் சூழல் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

Denne historien er fra August 28, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 28, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
Dinamani Chennai

லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்

லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.

time-read
1 min  |
September 18, 2024
இந்தியா சாம்பியன்
Dinamani Chennai

இந்தியா சாம்பியன்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.

time-read
1 min  |
September 18, 2024
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
Dinamani Chennai

விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்

விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.

time-read
2 mins  |
September 18, 2024
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
Dinamani Chennai

பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

time-read
1 min  |
September 18, 2024
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time-read
2 mins  |
September 18, 2024
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
Dinamani Chennai

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா

நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 18, 2024
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
Dinamani Chennai

சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக

சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 18, 2024
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
Dinamani Chennai

ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை

திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.

time-read
1 min  |
September 18, 2024
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
Dinamani Chennai

நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு

நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
Dinamani Chennai

விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி

விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

time-read
1 min  |
September 18, 2024