‘விதிகள் அடிப்படையிலான சா்வதேச ஒழுங்குமுறை, பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு மரியாதை, அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதிவழியில் தீா்வு ஆகியவற்றுக்கே நாங்கள் ஆதரவளிக்கிறோம்’ என்று ‘க்வாட்’ உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான இந்திய-பசிபிக் பிராந்தியமே எங்களின் முன்னுரிமை என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தென்சீன கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடிவரும் நிலையில், வியத்நாம், மலேசியா, பிலிப்பின்ஸ், புரூணே, தைவான் ஆகிய நாடுகள் மாற்றுக் கருத்தை கொண்டுள்ளன. இந்நிலையில், சீனாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பிரதமா் மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்தாா்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘க்வாட்’ கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணம், வில்மிங்டன் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
Denne historien er fra September 23, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 23, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på