லெபனானில் இஸ்ரேல் திங்கள்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 24 சிறார்கள், 42 பெண்கள் உள்பட 356 பேர் உயிரிழந்தனர்; 1,246 பேர் காயமடைந்தனர்.
லெபனானில் இஸ்ரேல் இது வரை நடத்திய தாக்குதல்களிலேயே இதுதான் கடுமையான தாக்குதலாகும்.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போர் 11 மாதங்களுக்குமேலாக நடைபெற்று வருகிறது.
அதேவேளையில் லெபனானும் எல்லையைப்பகிர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ் புல்லா கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லையில் இஸ்ரேலும், ஹிஸ் புல்லாக்களும் நாள்தோறும் மோதலில் ஈடுபட்டு வருவதால், அங்கு வசிக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பல லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூலையில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானில் ஹிஸ் புல்லா கிளர்ச்சியாளர்களின் மூத்த தளபதி ஃபுவாத் ஷுகர் உயிரிழந்தார். இதேபோல ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனீயேவும் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப் பேற்கவில்லை. ஆனால், அவரை இஸ்ரேல்தான்கொன்றது என்று நம்பப்படுகிறது. இருவரின் கொலைக் குப்பழிக்குப் பழியாக இஸ்ரேலுக்கு பதிலடி அளிக்கப்படும் என்று ஹிஸ் புல்லாக்கள் எச்சரித்திருந்தனர்.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த வாரம் லெபனானில் பேஜர் கருவிகள் திடீரென வெடித்துச் சிதறின. இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள், அந்நாட்டில் வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி மின்சார கருவிகள் வெடித்துச் சிதறின.
இந்தத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். சுமார் 3,000 பேர் காயமடைந்தனர்.
தொழில்நுட்ப ரீதியில் இந்த நூதன தாக்குதல்களை இஸ்ரேல் தான் நடத்தியது என்று லெபனான் கூறினாலும், அதுகுறித்து கருத்து தெரிவிக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. அதேவேளையில், அந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவும் இல்லை.
Denne historien er fra September 24, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 24, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
செயல்படாத கணக்குகள் விழிப்புணர்வு நடவடிக்கையை தொடங்கியது எஸ்பிஐ
புது தில்லி, டிச. 2: செயல்படாமல் முடங்கியுள்ள நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடையே ஏற்படுத்தும் நடவடிக்கையை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தொடங்கியுள்ளது.
ஜூனியர் ஆசிய ஹாக்கி: இந்திய கேப்டன் ஜோதி சிங்
புது தில்லி, டிச. 2: ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி, 20 பேருடன் அறிவிக்கப்பட்டது. ஜோதி சிங் அதன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வென்றார் வெர்ஸ்டாபென்
லுசாயில், டிச. 2: எஃப்1 கார் பந்தயத்தில் நடப்பு சீசனின் 23-ஆவது ரேஸான கத்தார் கிராண்ட் ப்ரீயில், நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நீட்டிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் டிச.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.12-இல் தொடக்கம்
சென்னை, டிச.2: 22-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச. 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அரசமைப்பு சட்டம் மீது விவாதம்: மத்திய அரசு ஒப்புதல்
அரசமைப்புச் சட்டமானது அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் அதன் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் விழுப்புரம்
விழுப்புரம், டிச. 2: ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் திங்கள்கிழமை வரை வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
வலுவிழந்த ஃபென்ஜால் புயல்: இன்று அரபிக் கடலை அடையும்
சென்னை, டிச.2: தமிழகத்தை உலுக்கிவிட்டு வலுவிழந்த ஃபென்ஜால் புயல், காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக நகர்ந்து கர்நாடகம் மற்றும் கேரளத்துக்கு இடைப்பட்ட அரபிக்கடலை செவ்வாய்க்கிழமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் கனமழை: தரைப் பாலங்கள் மூழ்கின
தருமபுரி, டிச. 2: ஃபென்ஜால் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் ரயில்வே பாலங்கள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் துண்டிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மொத்தம் 981.9 மி.மீ. மழை பதிவானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
அசோக் லேலண்ட் விற்பனை 14,137-ஆக அதிகரிப்பு
மும்பை, டிச. 2: கடந்த நவம்பர் மாதத்தில் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனங்களின் மொத்த விற்பனை 14,137-ஆக அதிகரித்துள்ளது.