முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான 'முரசொலி' செல்வம் (83), பெங்களூரில் வியாழக்கிழமை காலமானார்.
சென்னை கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன.
முரசொலி நாளிதழில் 'சிலந்தி' எனும் பெயரில் விமர்சன கட்டுரைகளை எழுதி வந்த பன்னீர்செல்வம் என்ற 'முரசொலி செல்வம், 1941ஆம்ஆண்டு ஏப்ரலில் பிறந்தார்.
முன்னாள் முதல்வரான கருணாநிதியின் சகோதரி மகனான செல்வம், திரைப்படதயாரிப்புத் துறையிலும் முத்திரை பதித்தவர். மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம்பிக்சர்ஸ்,பூம் புகார் புரொடக்ஷன்ஸ் ஆகிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார்.
முரசொலி ஆசிரியர்: முரசொலியில் ஆசிரியராக பொறுப்பு வகித்தாலும், புனைப்பெயரில் அவர் எழுதிய விமர்சன கட்டுரைகள் பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்தன. 55 ஆண்டுகளாக வைக்கப்பட்ட முரசொலியின் ஓர் அங்கமாகவே வாழ்ந்த அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்குப்பிறகும் அந்த நாளிதழின் பொலிவு குறையாமல் பார்த்துக் கொண்டார்.
பேரவையில் கூண்டு: கடந்த 1991-96-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் பேச்சுகள் முர சொலியில் வெளியானதாக உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த உரிமை மீறல் குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. அதன்படி, செல்வத்தை விசாரிக்க தனியாக கூண்டு தயாரிக்கப்பட்டு பேரவையில் வைக்கப்பட்டது. அதில், 'முரசொலி' செல்வம் நிறுத்தப்பட்டார். அதன்பிறகு. எந்த நடவடிக்கையும் இன்றி, பேரவையில் இருந்து வெளியேற செல்வத்துக்கு பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உத்தரவிட்டார். 'முரசொலி' செல்வத்தின் துணிச்சலை பாராட்டி, கூண்டு கண்டேன் குதூகலம் கொண்டேன்' என்ற தலைப்பில் கருணாநிதி கடிதம் எழுதினார்.
83 வயதான நிலையில், முரசொலி செல்வம் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். அங்கிருந் தபடியே முரசொலிக்கு கட்டுரைகளை எழுதி வந்தார்.
Denne historien er fra October 11, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 11, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் !
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
உதகையில் நீர்ப் பனியின் தாக்கம் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்ப் பனியின் தாக்கம் வெள்ளிக்கிழமை காலை அதிகரித்துக் காணப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
அமைச்சர் சேகர்பாபு
விஜயா வாசகர் வட்ட அ.முத்துலிங்கம் விருதுக்கு மொழிபெயர்ப்பாளர் கல்யாண் ராமன் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான அ.முத்துலிங்கம் விருதுக்கு கல்யாண் ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கி, ஐடி பங்குகள் அதிகம் விற்பனை
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
அமெரிக்க கார் தாக்குதல் தனிநபர் செயல்: எஃப்பிஐ
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரர் சம்சுதீன் ஜப்பார் தனி நபராகத்தான் செயல்பட்டதாகத் தெரிவதாக அந்த நாட்டு தேசிய புலனாய்வுத் துறையான எஃப்பிஐ தற்போது தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 59.11லட்சமாக உயர்வு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பரில் 59,11,065-ஆக உயர்ந்துள்ளது.
தனியார் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 34% அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் சொந்தப் பயன்பாட்டுக்காகவும், வர்த்தகத்துக்காகவும் தனியார் சுரங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி உற்பத்தி 34.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
தென் கொரிய முன்னாள் அதிபர் கைதை தடுத்த பாதுகாவலர்கள்
தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸார் கைது செய்ய விடாமல் அவரின் பாதுகாவல் படையினர் வெள்ளிக்கிழமை தடுத்தனர்.
சநாதனத்தின் அர்த்தம் அறியாமல் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி: ஜகதீப் தன்கர்
காலனிய மனோபாவத்தை கொண்ட சிலரே சநாதன தர்மத்தை நிராகரிப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.