ஷார்ஜா விமானத்தில் நடுவானில் கோளாறு: திருச்சியில் டிஜிசிஏ விசாரணை
Dinamani Chennai|October 13, 2024
திருச்சியிலிருந்து 144 பயணிகளுடன் ஷார்ஜாவுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தனது விசாரணையை சனிக்கிழமை தொடங்கியது.
ஷார்ஜா விமானத்தில் நடுவானில் கோளாறு: திருச்சியில் டிஜிசிஏ விசாரணை

விசாரணைக்காக அந்த விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு 144 பயணிகளுடன் வெள்ளிக் கிழமை மாலை புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் (ஏஎக்ஸ்பி 613)சக்கரங்கள் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக உள்ளே இழுக்கப்படாததால் 2.35 மணிநேரத்துக்கும் மேலாக நடுவானிலேயே வட்டமடித்தது. பின்னர், பாதுகாப்பாக திருச்சியிலேயே தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள், விமானப் பணியாளர்கள் என 150 பேரும் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழில்நுட்பக் கோளாறால் நடுவானிலேயே வட்டமடித்த விமானம் திருச்சி விமான நிலையத்தில பாதுகாப்பாகத் தரையிறங்கியதில் நிம்மதி. விமானப் பயணிகளின் பாதுகாப்பே எப்போதும் எங்களது முதன்மை நோக்கமாக உள்ளது என்றார்.

இதையடுத்து அமைச்சரின் உத்தரவின்படி, திருச்சி விமான நிலையத்துக்கு சென்னையிலிருந்து சனிக்கிழமை காலை வந்த டிஜி சிஏ தொழில்நுட்பக் குழுவினர் விமான நிலைய அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து முழுமையாகக் கேட்டறிந்து பதில்களைப் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஆய்வு செய்தனர்.

Denne historien er fra October 13, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 13, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

பாடம் நடத்த மாற்று நபரை அனுப்பிய ஆசிரியர் இடைநீக்கம்: கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிக்கே வராமல் மாற்று நபரை வகுப்பெடுக்க அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

time-read
1 min  |
November 07, 2024
Dinamani Chennai

காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் கூடாது: காவல் துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல்

காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் மீது அலட்சியம் காட்டாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
November 07, 2024
Dinamani Chennai

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ பதில் மனு தாக்கல்

சென்னை, நவ. 6: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காகித வடிவில் வழங்க முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 07, 2024
Dinamani Chennai

8 வழிச்சாலையாக மாறும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அதிவேக 8 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
November 07, 2024
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மலைச்சாமி காலமானார்
Dinamani Chennai

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மலைச்சாமி காலமானார்

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மலைச்சாமி (87) சென்னையில் புதன்கிழமை (நவ.6) காலமானார்.

time-read
1 min  |
November 07, 2024
Dinamani Chennai

தண்டனைக் கைதி சித்திரவதை வழக்கு; மேலும் 11 பேர் பணியிடை நீக்கம்

வேலூர் சிறையில் தண்டனைக் கைதி சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார்.

time-read
1 min  |
November 07, 2024
தாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்
Dinamani Chennai

தாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்

தாமதமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
November 07, 2024
Dinamani Chennai

முதல்வர் மு.க. ஸ்டாலின் நவ.15-இல் அரியலூர் வருகை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.15-ஆம் தேதி வரவிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
November 07, 2024
Dinamani Chennai

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
November 07, 2024
Dinamani Chennai

உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 07, 2024