அது இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் நம் நாட்டு குழந்தைகளுக்கு வழங்கிய தேசியப் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. வேறு ஒன்றுமில்லை, சந்திரயான்-1 திட்டத்தில் டாக்டர் கலாமின் ஆலோசனைப்படி மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்ட எம்.ஐ.பி. என்கிற 'நிலா மோதுகலன்' சந்திரனின் 'ஷேக்கிள்டன்' பள்ளத்தில் மோதி இறங்கியது. அந்த இடத்திற்கு 'ஜவாஹர் தளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் தோட்டத்தில் உள்ள மொட்டுகள் போன்றவர்கள், அவர்கள் தேசத்தின் எதிர்காலம், நாளைய குடிமக்கள் என்பதால் கவனமாகவும் அன்பாகவும் வளர்க்கப்பட வேண்டும்... இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதம் தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். - இதுவே பண்டித ஜவாஹர்லால் நேருவின் தொலைநோக்குப் பார்வை.
1963 நவம்பர் 21 அன்று தும்பா ஏவுதளத்திலிருந்து நைகி அப்பாச்சி என்னும் முதலாவது ஏவூர்தி தொடங்கி சந்திரன், செவ்வாய், சூரியன் போன்ற அண்டவெளி ஆய்வுகளுக்கு வித்திட்டவர்கள் நேரு, ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோர்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1946 செப்டம்பர் 2 அன்று 'இந்தியாவின் தற்காலிக அரசாங்கம்' எனப்படும் இடைக்கால அரசாங்கத்தின் துணைத் தலைவராக பிரிட்டிஷ் வைஸ்ராய் நியமியினால் நியமிக்கப்பட்டவர் நேரு.
அவ்வாறே, சுதந்திர இந்தியாவில் 1947 ஆகஸ்ட் 20 அன்று பல்வேறு அமைச்சர்கள், துறைச் செயலர்கள், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழும நிபுணர்கள் பங்கெடுத்த இந்திய அறிவியல் மாநாட்டில், ஜவாஹர்லால் நேரு, 'பசியோடு இருக்கும் ஆணோ பெண்ணோ யாருக்கும் சத்தியம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவனுக்கு அல்லது அவளுக்குத் தேவை உணவு. வயிறு வதங்கிக் கிடப்பவரிடம் சத்தியம் என்றோ, சாமி என்றோ, அதனினும் அரிய விஷயங்கள் குறித்தோ பேசுவது வெறும் கேலிக்கூத்து ஆகும். இங்கு ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் யாவும் வழங்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
Denne historien er fra November 14, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 14, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நவ. 25. 26-இல் கனமழை வாய்ப்பு
வங்கக் கடலில் புயல் உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் நவ. 25, 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஸ்தூரிக்கு ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேசுவரத்தில் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை சுமாா் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை பதிவானது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
தமிழர் தொன்மை அறிய ஆழ்கடலுக்குள் ஆராய்ச்சி
தமிழா்களின் தொன்மை குறித்து மேலும் அறியும் வகையில் ஆழ்கடலிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.
எம் & எம் விற்பனை புதிய உச்சம்
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய மாதாந்திர உச்சத்தைத் தொட்டுள்ளது.
தொய்விலிருந்து மீண்ட தொழிலக உற்பத்தி
முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த இந்தியாவின் தொழிலக உற்பத்தி, செப்டம்பரில் 3.1 சதவீதம் நேர்மறை வளர்ச்சி கண்டுள்ளது.
காஸாவில் போர் நிறுத்தத்துக்கு ஐ.நா. தீர்மானம்: அமெரிக்கா ரத்து
இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிப்பது பற்றிய அம்சம் இல்லாததால், காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.
சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை: ஆஸ்திரேலிய அரசு புதிய உறுதிமொழி
சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்தும் போது, தங்களின் தனிப்பட்ட விவரங்களை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்க பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதிளித்துள்ளது.
தாக்குதலில் 12 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் உயிரிழந்தனர்; ராணுவத்துடன் நடைபெற்ற மோதலில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
'கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்கும்'
ரஷியாவுடனான போரில் கால் கண்ணிவெடிகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.