![அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடுகள் அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டுப்பாடுகள்](https://cdn.magzter.com/1574665526/1731622155/articles/Dn2tOMavORgdaxV93GLsys/1731644090086.jpg)
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், நோயாளிகளுடன் வருவோருக்கு அடையாளப் பட்டை, பாதுகாப்பு பரிசோதனை (மெட்டல் டிடெக்டர்), சிசிடிவி கேமரா வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
அதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வருவோருக்கு கைகளில் அணியும் அடையாளப் பட்டை வழங்கும் நடைமுறையை அவர் தொடங்கிவைத்தார். அதன் பின்னர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அந்த சேவையை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:
மருத்துவர் பாலாஜிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவருக்கு ஏற்கெனவே 'பேஸ் மேக்கர்' பொருத்தப்பட்டுள்ளதால் அதுகுறித்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, செயல்பாடுகள் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார். பாலாஜியை கத்தியால் தாக்கிய விக்னேஷ் மீது கடுமையான ஏழு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதிய சீர்திருத்தங்கள்: சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கு என்னென்ன புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தலைமைச் செயலர் தலைமையில் உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Denne historien er fra November 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத் இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/UyFG2rb8h4yH2Ir3WFnsys/1739769187055.jpg)
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
![சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/EbJWvgFAApFRMBCoAqLsys/1739769032346.jpg)
சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விதைத்தால் மட்டும் போதுமா?
பனைவிதை விதைப்பது பற்றிய பேச்சு இப்போது பரவலாகி வருகிறது. ஒரு கோடி பனைவிதை நடுவதற்கான பணியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
![பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/NHvkVaitScyLsGIE9vXsys/1739769126891.jpg)
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்
கணிதம், உடற்கூறியல், தாவரவியல், இயற்பியல், வணிகவியல், வரலாறு அரசியல், பொருளாதாரம், ஆட்சியியல் முதலான பல்வேறு துறைச் சொற்களைத் திருத்திச் சீரமைக்கும் பணியில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முனைந்து செயல்பட்டதை அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
![பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை! பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/MWX4F4HLBjf0hzxbqYxsys/1739769109647.jpg)
பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!
ரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற வாஷிங்டன் சந்திப்பு இரு தரப்பாலும் திருப்திகரமானது என சொல்லிக் கொள்ளப்பட்டாலும், அதில் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சங்களை அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் குறித்த எதிர்பார்ப்பை எழுப்புகிறது.
![கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/cKvLW1wIbgQw2NpKr47sys/1739769142972.jpg)
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
மானாமதுரை, பிப். 16: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
![இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/k4N6azPb00mGdwtn6iEsys/1739769159857.jpg)
இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு
மஸ்கட், பிப். 16: 'இந்திய பெருங்கடல் உலகின் உயிர்நாடி' என்று குறிப்பிட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அப்பிராந்தியத்தின் வளர்ச்சி, இணைப்பு, கடல்சார் பாதுகாப்புக்கு நாடுகள் ஒருங்கிணைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
![ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/vlZ8wa1R6vYmkKXAA3Ssys/1739768778595.jpg)
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.
![திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1996705/8Pus070Trlgb7HyayWysys/1739769055068.jpg)
திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை
திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு புனரமைக்கப்பட்ட தாடங்கம் (காதணி) பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மும்பை தாக்குதலுக்கு முன் தென்னிந்தியாவுக்கும் பயணித்த தஹாவூர் ராணா
கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பரில் நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயங்கரவாதி தஹாவூர் ராணா பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.