அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டி கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டொனால்ட் டிரம்ப் எளிதாக வெற்றி பெற்றுள்ளார்.
78 வயதுடைய டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி, அமெரிக்கா இன்னும் ஒரு பெண்ணின் தலைமையை ஏற்கும் மனப்பக்குவத்தைப் பெறவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. முதலாளித்துவம் அமெரிக்கா நம்பும் சித்தாந்தம் என்பதையும் அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 பிரதிநிதிகளின் வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார். டிரம்ப் 312 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப்புக்கும் ஹாரிஸுக்கும் இடையிலான போட்டி, எதிர்பார்த்தது போல கடுமையான போட்டியாக இருக்கவில்லை. வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் பெரும்பாலான அமெரிக்கர்கள் டிரம்ப்புக்கு வாக்களித்துள்ளனர். இந்தத் தேர்தலில் 'நாட்டின் பொருளாதாரம் மற்றும் குடியேற்றப் பிரச்னையை முன்னிறுத்தியே டிரம்ப் பரப்புரை செய்தார்.
அமெரிக்காவில் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. 1970களில் இருந்ததை விட பணவீக்கம் அதிகரித்திருப்பதும் அதனை மக்கள் தங்கள் அன்றாடங்களில் உணர்கிறார்கள் என்பதையும் புரிந்து கொண்ட டிரம்ப் அதனையே ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு 'நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நீங்கள் இப்போது செழிப்பாக இருக்கிறீர்களா? என்ற கேள்வியை அமெரிக்க மக்கள் முன்வைத்தார்.
பணவீக்கப் பிரச்னையை எதிர்கொண்டுள்ள வாக்காளர்கள் மாற்றத்துக்காகக் காத்திருந்துள்ளனர் என்பதை டிரம்ப் பெற்றுள்ள வாக்குகள் நிரூபிக்கின்றன. பைடனின் திட்டங்களை மக்கள் விரும்பவில்லை என்பதைத் தாண்டி எதிர்மறையான எண்ணங்களையும் கொண்டிருந்தனர். இதன் விளைவுகளை கமலா ஹாரிஸ் எதிர்கொள்ளும் படியானது அவருக்குப் பின்னடைவைத் தந்துள்ளது. டிரம்ப் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Denne historien er fra November 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அம்பேத்கர் விவகாரம்: காங்கிரஸ் - விசிக போராட்டம்
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலம் விற்பனை: பெண் கைது
ஆவடி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.3.66 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில் பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
மெட்ரோ ரயில் பணி: அடையாறில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக அடையாறில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
முதியவரின் சிறுநீரகத்தில் புற்றுநோய்க் கட்டி: நுண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
முதியவரின் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் சென்னை, வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
காய்ச்சல் பாதிப்புகள்: அரசுக்கு ஒத்துழைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகள், அரசுக்கு பங்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பில் கலைஞர்களுக்கு 'கலா சிகாமணி' விருது
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு 'கலா சிகாமணி' விருதுகள் வழங்கப்பட்டன.
எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு
எண்ணூரில் சுமார் 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தை அமைப்பது குறித்து பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் சென்னை எர்ணாவூரில் நடைபெற்றது.
முதல்வர் மருந்தகங்கள் அமைக்க 850 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு
தமிழகத்தில் மூலப்பெயர் (ஜெனரிக்) கொண்ட மருந்து களை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்காக 850-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மஞ்சப் பை விழிப்புணர்வு முகாம்; மேயர் தொடங்கி வைத்தார்
நெகிழிப் பைகளுக்கு மாற்றாக, துணிப் பைகளைப் பயன்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப் பை விழிப்புணர்வு முகாமை அம்பத்தூரில் மேயர் ஆர். பிரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
மெரீனா உணவுத் திருவிழா மூலம் ரூ. 2 கோடி வருவாய் எதிர்பார்ப்பு
மெரீனா உணவுத் திருவிழா மூலம் ரூ. 2 கோடி வரை வருவாய் எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.