தி எண் 6342 - அறிஞர் அண்ணா சென்னை மத்திய சிறையில் இருந்தபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம். அரசியல் சாசன மொழிப் பிரிவின் 17-ஆவது பிரிவை பொது இடத்தில் கொளுத்தும் அறப்போரில் 1963 டிசம்பரில் ஆறு மாதம் தண்டனை பெற்று சென்னை மத்திய சிறையில் இருந்தபோது பெற்ற அனுபவங்களை அன்றாடம் டைரியில் பதிவு செய்துள்ளார்.
சிறை வாசம் எவ்வாறு தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கிறது, எவ்வாறு சிறைப் பணியாளர்கள் நடந்து கொள்கிறார்கள், விதிமுறைகள், நடக்கும் முறைகேடுகள், சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் கட்டாயம் போன்றவற்றைப் பற்றி எழுதியுள்ளார்.
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, சிறை பட நேரிடுபவர்களுக்கெல்லாம், பிற கைதிகளை 'நல்லவர்களாக்கும்' முறை மேம்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது! சிறையில் பல விதமான குற்றங்களுக்காக அடைக்கப்பட்டிருப்பவர்களிடம் பழக வேண்டிய நிலை இருப்பதும், அந்த நிலை காரணமாக, அவர்களுடன் பேசி அவர்கள் கதையை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும், அவர்கள் கூறுவது கேட்டு மனம் இளகுவதும் இயற்கையாகவே ஏற்படுகிறது. சிறையில் சீர்திருத்தம் வேண்டும் என்பது பற்றி, 'இன்று மற்றவருடன் மெத்த ஆர்வத்துடன் பேசத் துவங்கினோம்' என்று 7-3-64 நாளில் தனது டைரியில் குறிப்பிட்டிருக்கிறார்.
அறுபது வருடங்கள் கடந்தும் சிறை சீர்திருத்தம் என்பது கானல் நீராகவே தொடர்கிறது! சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் கைதிகளை துறை உயர் அதிகாரிகள் வீட்டில் வேலை செய்வதற்குப் பணித்தது குறித்து கண்டனம் தெரிவித்து, விசாரணை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது.
சிறையில் விசாரணைக் கைதிகள் தனியாகவும் தண்டனை பெற்ற கைதிகள் வேறு இடத்திலும் வைக்கப்பட்டிருப்பார்கள். புழல் சிறையில் இரண்டு பிரிவினருக்கும் தனி வளாகம் உள்ளது. சிறை விதிகள்படி அவர்களது பராமரிப்பு வேறுபடும். தண்டனை பெற்றவரின் மனநிலை வித்தியாசப்படும். மன உளைச்சலும் கடுப்பும் அதிகமாக இருக்கும். மற்ற கைதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த தனிமைப்படுத்தல். இதை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
Denne historien er fra November 18, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 18, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,542 கனஅடியாகக் குறைந்தது.
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!
பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையத்தில், ஐயப்ப சுவாமிக்கு சொந்தமான அஞ்சல் குறியீட்டு எண் (உள்படம்).
மாவட்ட புத்தகக் காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
சென்னை, நவ.19: சென்னை புத்தகக் காட்சி போன்று அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுக்கு மொத்தம் 86.44 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். அதன் மூலம் ரூ.69.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ரூ. 279 கோடியில் பட்டாபிராம் டைடல் பார்க்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்
ஆவடி, நவ. 19: ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.
பங்கு பரஸ்பர நிதி: முதலீடுகள் உச்சம்!
கடந்த அக்டோபரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு இது வரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போர்!
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த செவ்வாய்க்கிழமையுடன் 1000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஹாங்காங்: 45 ஜனநாயக ஆர்வலர்களுக்கு சிறை
ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 35 ஜனநாயக ஆர்வலர்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
ஏழு குழந்தைகளை மீட்டு இரட்டைக் குழந்தைகளை இழந்த யாகூப்!
ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் சோகம்
இந்தியாவின் பிளேயிங் லெவன் கணக்கு
பெர்த், நவ. 19: சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றான, பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், வரும் வெள்ளிக்கிழமை (நவ.22) தொடங்க இருக்கிறது.