துணை முதல்வர்களாக சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜீத் பவார் ஆகியோர் பதவியேற்றனர்.
மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் மூவருக்கும் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த ஷிண்டே, இம்முறை துணை முதல்வராகப் பதவியேற்கும் தகவலை, விழாவுக்கு சில மணி நேரம் முன்னர்தான் அவரது கட்சி உறுதிசெய்தது.
288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர பேரவைக்கு கடந்த நவ. 20-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், பாஜக தலைமையிலான 'மகா யுதி' கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின. அதேநேரம், எதிர்க்கட்சிகளின் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இக்கூட்டணியில் காங்கிரஸுக்கு 16, சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சிக்கு 20, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிக்கு 10 இடங்களே கிடைத்தன.
Denne historien er fra December 06, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 06, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
குடிமைப் பொருள் விநியோகத்தில் குறைபாடா?
டிச.14-இல் குறைதீர் முகாம்கள்
புத்தாக்க நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும்
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மதிப்பீடு மற்றும் தர நிர்ணயக் குழுவின் தலைவர் டாக்டர் சஞ்சய் பிஹாரி வலியுறுத்தினார்.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு': பாரதியின் கூற்றுப்படி வாழ்வோம்
ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன?
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
குத்தம்பாக்கம் பேருந்து முனைய பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
குத்தம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை தலைவருமான பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தை நோக்கி நகரும் புயல் சின்னம்
4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
டங்ஸ்டன் சுரங்கம் கூடாது
மக்களவையில தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.