ரே நதிதான், எல்லா காலத்திலும் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனால், அதில் ஓடும் தண்ணீர்தான் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறாக இருக்கிறது. ஏனென்றால், தண்ணீர் ஒவ்வொரு பருவகாலத்திலும் அதற்கான வேகத்தோடு பெருகி ஓடுகிறது. இப்படி காலம் காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
இருப்பினும் நதிநீர் பிரச்னைகள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. நீதிமன்றம் அதற்குத் தீர்வு தந்தாலும், அந்தத் தீர்வைப் பின்பற்ற சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மறுத்து விடுகின்றன. வீணாகப் போகிற மழைநீர் வெள்ளமெனப் பாய்ந்தோடுவதைப் பார்த்தும், தண்ணீரின் அருமை தெரிந்த மக்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ பழகிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது ஃபென்சாய் புயலில் சிக்கித் தவித்தது தமிழகம். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி வரைக்குமான அதன் பயணம் சென்னையையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டுப் போயிருக்கிறது. விழுப்புரம் மற்றும் கடலூர் நகரங்களில் தென்பெண்ணை ஆற்றின் வெள்ள நீர் புகுந்ததால், குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. வரலாறு காணாத மழை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்த போதும், முன் நடவடிக்கைகள் எடுப்பதில் தவறி விட்டது, தமிழக அரசு. தலைநகரம் சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன. மின்தடையாலும், தண்ணீர் தேங்கி வழிந்தோடுவதற்கான வழி இன்றி தண்ணீர் அங்கும் இங்கும் அலைமோதியதாலும் சென்னை மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.
கிழக்கு கடற்கரைச்சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் சூறாவளி காற்று வீசி நம்மை உலுக்கி விட்டுத்தான் சென்றது. கனமழை பெய்தபோதும், எந்தத் தேசிய பேரிடர் மீட்புக்குழுவோ, அரசு அதிகாரியோ அங்கு வரவில்லை. நிவாரண உதவிகள் அளிக்கப்படவில்லை. மீனவர்கள் ஒரு வாரமாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. 'எங்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளது' என்று மாமல்லபுரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் குற்றம் சாட்டினார். 'பதினைந்து நாட்கள் கூட மழை பெய்திருக்கிறது. ஆனால், இப்படி நடந்ததில்லை' என்று திருவண்ணாமலை மண் சரிவு குறித்து மக்கள் பதற்றப்படுகிறார்கள். மண் சரிவில் சிக்கி ஏழு பேர் மாண்டு போனார்கள்.
Denne historien er fra December 14, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 14, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை (டிச.16) மட்டும் 87,967 பேர் தரிசனம் செய்தனர்.
நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !
மேட்டூர் அணை நீர்மட்டம் 118.53 அடியாக உயர்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனரா வங்கி
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி உயர்த்தியுள்ளது.
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு
குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகார் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3,784 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான வனுவாட்டு அருகே, கடலில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு
தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந் தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 பேர் உயிரிழந்தனர்.
ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு
வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடர்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாரணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!
துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார்.