அரசியல்... அன்றும் இன்றும்!
Dinamani Karaikal|March 15, 2025
இன்றைய அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. மக்களிடம் போவதும் இல்லை; மக்களை மதிப்பதும் இல்லை; தேடிவரும் மக்களைச் சந்திப்பதும் இல்லை. மக்களின் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும்.
உதயை மு. வீரையன்

ந்திய நாட்டின் அரசியல் என்பது சுதந்திரப் போராட்டத்திலிருந்து தொடங்குகிறது. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, மலேயா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பிடித்து ஆளத் தொடங்கியிருந்தனர். அப்போது இந்தியா ஒன்றாக இல்லை. 56 தேசங்களாகப் பிரிந்து கிடந்தது. வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, அவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினர். குறுநில மன்னர்களும், நிலக்கிழார்களும், ஜமீன்தார்களும் எளிதாக ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த காந்தியார் ஆங்கிலேயரின் அடக்குமுறைகளைக் கண்டு வெகுண்டெழுந்தார். தாய்நாட்டைக் காக்க இளைஞர்களை அறைகூவி அழைத்தார். அவரது அகிம்சைக் கொள்கையால் கவரப்பட்டு இளைஞர்களும் தம் உடல், பொருள், உயிரை அர்ப்பணித்திட அவர் பின் திரண்டனர்.

இதே காலகட்டத்தில் தீவிரவாத இளைஞர்கள் வன்முறைகளில் இறங்கினர். வெள்ளையர்கள் நடத்திய நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஆஷ் துரையைச் சுட்டு வீழ்த்திய வாஞ்சிநாதன், கொடிகாத்த குமரன் இவர்களைப் போன்று எண்ணற்ற இளைஞர்களைக் கூறலாம். இவர்களுடைய நோக்கம் பணம், பதவி இல்லை. தேசத்தை விடுவிப்பதே நோக்கமாக இருந்தது. அதற்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருந்தனர்.

இன்று அரசியல் எப்படி இருக்கிறது? எங்கே சென்றால் பணமும், பதவியும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு கட்சியில் சேர்கிறார்கள். அல்லது கட்சியைத் தொடங்குகின்றனர். கட்சியைத் தொடங்கும் போதே முதலமைச்சர் நாற்காலியைத் தவிர, வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவது இல்லை.

அந்தக் காலத்தில் மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தனர். மக்களிடம் சென்று, மக்களிடம் கற்றுக் கொண்டு, மக்களுக்குப் பணியாற்றுவதே அரசியல் என்று அரசியல் விற்பன்னர்கள் கூறினர். இப்போது அதையெல்லாம் எடுத்துக் கூற யாரும் இல்லை. சொன்னாலும் கேட்பதற்கு எவரும் இல்லை.

Denne historien er fra March 15, 2025-utgaven av Dinamani Karaikal.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra March 15, 2025-utgaven av Dinamani Karaikal.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI KARAIKALSe alt
Dinamani Karaikal

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற எதிர்ப்பு

வழக்குரைஞர்கள் தீர்மானம்

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Karaikal

காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்

தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Karaikal

விளாசிய பெத் மூனி: வென்றது ஆஸி.

நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Karaikal

ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்ட இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Karaikal

எம்எல்ஏ-க்களை பேருந்தில் வழியனுப்பிய அமைச்சர் அதிமுக கோரிக்கை ஏற்பு

அதிமுக கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை வளாகத்திலிருந்து உறுப்பினர்களை அவர்கள் தங்கும் பேரவை விடுதிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தார்.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Karaikal

குறுகலான சாலைகளில் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசனை: அமைச்சர்

குறுகலான சாலைகளில் சிற்றுந்துகளைக் காட்டிலும் சிறிய ரக வாகனங்களை இயக்க ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Karaikal

கேள்வி நேரத்துக்குப் பதிலாக விவாதம்; மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம், தனிநபர் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Karaikal

பள்ளி மாணவர்கள் களப் பயணம்

வேதாரண்யம் அருகே உலக வன நாளையொட்டி, தேசிய பசுமை படை மாணவர்கள் வெள்ளிக்கிழமை பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனர்.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Karaikal

போக்குவரத்துக் கழகங்களில் 3,274 காலிப் பணியிடங்கள்

விண்ணப்பப் பதிவு தொடக்கம்

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Karaikal

கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்

'கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் தங்கமணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

time-read
1 min  |
March 22, 2025