![IMF ஒப்பந்தத்தை மாற்றினால் பணத்தை இழக்க நேரிடும் IMF ஒப்பந்தத்தை மாற்றினால் பணத்தை இழக்க நேரிடும்](https://cdn.magzter.com/1576149266/1724368382/articles/-OdhF_MjT1724388196461/1724388342860.jpg)
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் புதன்கிழமை (21) நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை நிபுணர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'தேசத்தின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற தொளிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன சிறப்புரையாற்றினார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு நிலையான பொருளாதாரம் அவசியம் எனவும், சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சீனா எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் ஒப்பத்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சலுகைகளையும் அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் நிர்மாணம் மற்றும் அபிவிருத்தித் துறைக்கு முக்கிய பங்கு உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து வெளிநாட்டு நிதியுதவி திட்டங்கள் நிறுத்தப்பட்டதாவ் நிர்மாணத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், வங்கிச் சலுகைகள் வழங்குதல், நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்குச் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளைச் செலுத்துவது போன்ற இத்துறையில் பணிபுரிவோர் மீது சுமத்தப்பட்டிருந்த சுமையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததையும் நினைவு கூர்ந்தார்.
தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து புதிய முதலீடுகள் ஈர்க்சுப்படும் போது நிர்மாணத்துறையும் வளர்ச்சியடையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கொழும்பு, பிங்கிரிய, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய புதிய முதலீட்டு வலயங்களில் சுற்றுலா ஹோட்டல் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தல், பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொழும்பு, காலி மற்றும் கண்டியை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கமனித்தார்.
Denne historien er fra August 23, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 23, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/0cpPlW3Kg1739771131423/1739771226266.jpg)
இராணுவ வீரர்களுக்கு விசேட அறிவிப்பு
வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் அமைதி காக்கும் பணிகளை விரைவு படுத்துவதற்காக, இராணுவ மேஜர் பதவிக்கு கீழே உள்ள அனைத்து வீரர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அந்தந்த புந்த படைப் பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தலைமையகம் அனைத்து படைப்பிரிவு கட்டளை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
![“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல" “கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/H9OQxhJAj1739771485764/1739771541828.jpg)
“கல்வித் தகைமை பிரச்சினை அல்ல"
தனது கல்வித் தகுதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ள முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, அத்தகைய கோரிக்கைகள் வெறும் அரசியல் தந்திரோபாயங்கள் என்று கூறியுள்ளார்.
![தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/3upn1XQp_1739771323043/1739771459674.jpg)
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் - கன்னி பாதீடு இன்று
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன
![பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/eLCpAefSm1739770020434/1739770088923.jpg)
பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை
உங்களுக்காகக் கட்டப்படும் வீடுகளுக்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும்
![நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல் நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/nFbreSSuF1739770367988/1739770431901.jpg)
நாட்டின் பொருளாதார உற்பத்திக்கு பாரிய சிக்கல்
நாட்டிலுள்ள திறமையான தொழிலாளர்கள் வெளியேறுவதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
![அனைத்தும் எதிரணியின் பிரசாரம் அனைத்தும் எதிரணியின் பிரசாரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/83FquNjpJ1739770283690/1739770366216.jpg)
அனைத்தும் எதிரணியின் பிரசாரம்
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டமை தொடர்பாக பல விமர்சனங்கள் தெரிவிக்கிப்படுகின்றன.
!["தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை” "தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/neYnlq_bj1739770107272/1739770277933.jpg)
"தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை”
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
![சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/wsNKCTl7g1739771015867/1739771066725.jpg)
சுமந்திரன், சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
அம்பாறை - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (16) பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
![IMF வுடன் இன்று பேச்சு IMF வுடன் இன்று பேச்சு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/Oe81Ru54O1739769929909/1739770019835.jpg)
IMF வுடன் இன்று பேச்சு
நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும்
![இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1996836/e7AVtoq8A1739771068569/1739771129955.jpg)
இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், இன்று திங்கட்கிழமை (17) காலை, ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.