ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை கட்டாயமானது இல்லை என்றும், வாக்காளர் அட்டை கிடைக்காதோர் வாக்களிப்பு நிலையத்தில் செல்லுபடியான அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ள அவர், "வாக்கு உங்கள் உரிமை, பலம். அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்.” என கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில், வியாழக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "ஜனாதிபதி தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, செப்டம்பர் 21 ஆம் திகதி இயலுமானவரைக் காலைவேளையிலேயே சென்று வாக்குரிமையைப் பயன்படுத்தி விடுங்கள் என்று கேட்டுக்கொண்ட அவர், வாக்களித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள்.
தேர்தல் விதிமீறல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேர்தல்கள் கடமைகளுக்காக சகல அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நியமனக் கடிதத்தின்படி உரிய இடத்திற்குச் செல்ல வேண்டும்.
அவர்களின் நியமனக் கடிதங்களை மாற்றவோ, இரத்துச் செய்யவோ முடியாது. கடமைக்கு வராவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதேவேளை, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்குள் தேர்தல் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Denne historien er fra September 20, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 20, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
“8 மணிநேர வீட்டு வேலைக்கு 2,000 ரூபாய்"
கனகராசா சரவணன்
தடையை மறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சீமான் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரள செவிலிக்கு மரண தண்டனை
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாறி கவிழ்ந்து விபத்து: 64 பேர் ஸ்தலத்திலேயே பலி
எத்தியோப்பியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில், 64 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு உத்தரவு
தென்கொரி யாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலை கைது செய்யுமாறு, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘சிற்றியுடன் இன்னும் ஒப்பந்தப் பேச்சுக்கள் இல்லை’
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான கெவின் டி ப்ரூனே, கழகத்துடன் இன்னும் ஒப்பந்தப் பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: இப்ஸ்விச் டௌணிடம் தோற்ற செல்சி
யுனைட்டெட்டை வென்ற நியூகாசில்
சிம்பாப்வே எதிர் ஆப்கானிஸ்தான்: முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது
சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வியாழக்கிழமை (26) ஆரம்பித்து திங்கட்கிழமை (30) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது போட்டி நாளை: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கி டையிலான மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது வியாழக்கிழமை (02) அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாணவனை மிரட்டி ரூ.67,000 கொள்ளை
தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனைக் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விட்டு, அவரை காரில் பலவந்தமாக ஏற்றிச் சென்று 67,000 ரூபாயை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் காருடன் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.