ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார்.
கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
பின்னர், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.
இந்நாட்டில் அண்மைக்காலத்தின் மிக மோசமான அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது என்றும், அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்குத் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததாக நம்புவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
Denne historien er fra October 07, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 07, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
“8 மணிநேர வீட்டு வேலைக்கு 2,000 ரூபாய்"
கனகராசா சரவணன்
தடையை மறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சீமான் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரள செவிலிக்கு மரண தண்டனை
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாறி கவிழ்ந்து விபத்து: 64 பேர் ஸ்தலத்திலேயே பலி
எத்தியோப்பியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில், 64 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு உத்தரவு
தென்கொரி யாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலை கைது செய்யுமாறு, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘சிற்றியுடன் இன்னும் ஒப்பந்தப் பேச்சுக்கள் இல்லை’
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான கெவின் டி ப்ரூனே, கழகத்துடன் இன்னும் ஒப்பந்தப் பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: இப்ஸ்விச் டௌணிடம் தோற்ற செல்சி
யுனைட்டெட்டை வென்ற நியூகாசில்
சிம்பாப்வே எதிர் ஆப்கானிஸ்தான்: முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது
சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வியாழக்கிழமை (26) ஆரம்பித்து திங்கட்கிழமை (30) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது போட்டி நாளை: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கி டையிலான மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது வியாழக்கிழமை (02) அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாணவனை மிரட்டி ரூ.67,000 கொள்ளை
தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனைக் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விட்டு, அவரை காரில் பலவந்தமாக ஏற்றிச் சென்று 67,000 ரூபாயை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் காருடன் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.