தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை கடந்த பெப்ரவரி மாதம். 17ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்து வரவு-செலவுத் திட்ட உரையை ஆற்றிய நிலையில், வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்று கடந்த 25ஆம் திகதி மாலை 6.10 மணியளவில் விவாதம் நிறைவடைந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 109 மேலதிக வாக்குகளினால் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜீவன் தொண்டமான் எம்.பியாகவுள்ள ஐக்கிய தேசியக்கட்சி, நாமல் ராஜபக்ஷ எம்.பியாகவுள்ள பொதுஜன பெரமுன, ரவி கருணாநாயக்க எம்.பியாகவுள்ள புதிய ஜனநாயக முன்னணி,திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜனசக்தி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இந்த வரவு-செலவுத் திட்டத்தினை சிங்கள எதிர்க்கட்சிகள், அவற்றோடு பங்காளிகளான மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்த்து வாக்களித்தபோது, அரசு தரப்பினருடன் இணைந்து யாரும் எதிர்பாராத வகையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாக வாக்களித்து அதிர்ச்சியளித்தார். அதேநேரம், இலங்கை தமிழரசுக் கட்சியின் 8 எம்.பிக்களும் சுயேச்சைக் குழு 17 இந்த யாழ். மாவட்ட எம்.பியான அர்ச்சுனாவும் வாக்களிப்பில் பங்கேற்காது அவர்களும் அதிர்ச்சியளித்தனர்.
Denne historien er fra March 06, 2025-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 06, 2025-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

வவுச்சர் காலம் நீடிப்பு
2025ஆம் ஆண்டிற்கான பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் ஏப்ரல் 10ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
"இன ரீதியாக பார்ப்பது முற்றிலும் தவறானது"
அர்ச்சுனா எம்.பி.தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை இன ரீதியாகப் பார்ப்பது முற்றிலும் தவறானது.

கடந்த முறை விட்டதைப் பிடிக்குமா சண்றைசர்ஸ்?
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) கடந்த பருவகாலத்தில் இமாலய ஓட்ட எண்ணிக்கைகளைக் குவித்து எதிரணிகளுக்கு அச்சமூட்டிய சண்றைசர்ஸ் ஹைதரபாத், இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் விட்டதை இம்முறை பிடிக்கும் நோக்கில் இம்முறை களமிறங்குகின்றது.

“குண்டு விழவில்லை; துண்டு விழுந்தது"
யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள இந்த நாட்டில் இப்போது குண்டு விழாத போதும், வரவு- செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை அதிகரித்துச் செல்கிறது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

அதானி குழுமம் தெளிவுப்படுத்தல்
இலங்கையில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை அதானி கிரீன் எனர்ஜி SL Ltd. திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறது.
கன்னி பட்ஜெட்டின் இறுதி வாக்கெடுப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் (பட்ஜெட்டின்) மீதான மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (20) மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

போதை குளிசைகளுடன் இளைஞன் கைது
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை
“நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கான தடை இந்த பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா?.

மே.6 வாக்களிப்பு
336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை 2025 மார்ச் 17 ஆரம்பிக்கப்பட்டது.

“வாழைச்சேனையில் பல்பெர்ருள் வலயம்”
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையுடன் இணைந்ததாக பல்பொருள் உற்பத்தி வலயத்தை அமைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்று கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.