நடிகர் எம்.ஆர். ராதா நாடகக்குழு தஞ்சாவூரில் முகாமிட்டிருந்தது. புதிய நாடகம் நடத்த முடிவு செய்த ராதா, மு.கருணாநிதியைச் சந்தித்து விஷயத்தைச் சொல்ல, ‘தூக்குமேடை’ நாடகத்தை எழுதிக்கொடுத்தார் கருணாநிதி. இந்த நாடக விளம்பரங்களில் தான் வில்லங்கம் வந்தது.
பெரியாரிடமிருந்து பிரிந்து சென்ற அறிஞர் அண்ணா மீது ராதாவுக்கு தீராத கோபம். அதனால் அண்ணாவுக்கு உரிய பட்டத்தைத் தூக்கி ‘அறிஞர்’ கருணாநிதி எழுதிய ‘தூக்குமேடை’ நாடகம் என விளம்பரம் செய்யப்பட்டது.
கருணாநிதிக்கு இது தெரியவர, “அறிஞர் என்றால் அது அண்ணாவை மட்டுமே குறிக்கும். நாடகத்தை நடத்தாதீர்கள்` என ராதாவுக்கு தகவல் அனுப்பினார். நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டதால் நாடகம் அரங்கேறியது. நாடக இடைவேளையில் பட்டுக்கோட்டை அழகிரி மூலம் ‘கலைஞர்` எனும் பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கச் செய்தார் எம்.ஆர்.ராதா.
‘உறந்தை உலகப்பன்’ எனும் நாடகக் கலைஞர்தான் 5.4.1952 அன்று தனது ‘அரும்பு’ நாடக அரங்கேற்றத்திற்கு வந்திருந்த எம்.ஜி.ஆருக்கு, அதே விழாவுக்கு வந்த கலைஞர் கருணாநிதி மூலம் ‘புரட்சி நடிகர்` என்கிற பட்டத்தை வழங்கச் செய்தார்.
எம்.ஜி.ஆர். தனது படங்களில் மக்களுக்கு நல்ல விஷயங்களைப் போதிப்பதை வழக்கமாகக் கொண்டதால் திருநெல்வேலி ரசிகர்கள் அவரை ‘வாத்தியார்` என அழைக்கத் தொடங்கினர். அதையே சென்னையின் பூர்வகுடி மக்கள் ‘வாத்யார்’ என்று அழைத்து மகிழ்ந்தனர்.
‘மக்கள் திலகம்’ என்கிற பட்டத்தை ‘பேசும்படம்’ பத்திரிகை வாசகர் ஒருவர் எம்.ஜி.ஆருக்கு அந்தப் பத்திரிகை மூலமே வழங்கினார். ஒரு நிகழ்ச்சியில் ஆன்மிகப் பெரியவர் கிருபானந்த வாரியார் ‘பொன்மனச் செம்மல்’ என்கிற பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கினார்.
Denne historien er fra October 13, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 13, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
‘சிம்’ மாணவர்களுக்குப் புதிய $60 மி. நிதியம்
‘சிம்’ எனப்படும் சிங்கப்பூர் நிர்வாகக் கழகம், தனது 60ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி புதிதாக 60 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள நிதித்திட்டத்தை அறிவித்துள்ளது.
இலங்கைப் பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் வோங் வாழ்த்து
இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்ற ஹரிணி அமரசூரியாவுக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
மழையால் 33% பயிர்கள் பாதிப்பு இருந்தால் உரிய இழப்பீடு: அமைச்சர் பன்னீர்செல்வம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது.மழையால் 33% நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்து இருந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மணிப்பூரில் 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு
மணிப்பூரின் இம்பால் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாள்களுக்குப் பிறகு நவம்பர் 29 முதல் மீண்டும் தொடங்கும் என அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
சீனாவை முந்திக்கொண்டு தைவான் போர்ப் பயிற்சி
தைவான் ராணுவம் தனது எதிர்த் தாக்குதல் திறனைச் சோதிக்க வியாழக்கிழமை (நவம்பர் 28) காலையில் விமானத் தற்காப்புப் பயிற்சியை நடத்தியது.
இந்தோனீசிய நிலச்சரிவுகளில் குறைந்தது 27 பேர் மரணம்
இந்தோனீசியாவின் வடசுமத்திரா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவற்றின் காரணமாக குறைந்தது 27 பேர் மாண்டுவிட்டதாக நவம்பர் 28ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.
15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கார் பந்தயத்தில் அஜித்
ஒருபுறம் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித், மறுபுறம் தனது கார் பந்தயம் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
எங்கள் வீட்டுக்கு மகாலட்சுமி கிடைத்துள்ளார்: சித்தார்த்
அதிதி போன்ற ஒரு பெண் மனைவியாக அமைந்தது நான் பெற்ற வரம் என்று நேர்காணல் ஒன்றில் சித்தார்த் கூறியுள்ளார்.
சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்திய விருந்து
இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் இணைந்து ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவரும் தீபாவளி தேநீர் விருந்து நிகழ்ச்சி புதன்கிழமை (நவம்பர் 27) சிறப்பாக நடைபெற்றது.
பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் காலமானார்
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் நவம்பர் 28ஆம் தேதியன்று காலமானார்.