20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிவறையும் 50 மாணவர்களுக்கு ஒரு மலக்கழிவறையும் இருக்க வேண்டும் என்பது மத்திய கல்வி அமைச்சு வகுத்துள்ள விதிமுறை.
ஆனால், இந்திய அளவில் சுமார் 5,000 தனியார் பள்ளிகளில்கூட போதுமான கழிவறை வசதிகள் இல்லை என்பது ‘ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் முறை+ 2019-20’ (UDISE+ - Unified District Information System For Education Plus) ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழகம், புதுடெல்லி, பஞ்சாப், கோவா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறை வசதி உள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் நூறு விழுக்காடு அளவுக்கு குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் ஏறக்குறைய 58 விழுக்காடு பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என்பது வேதனை தரும் தகவல்.
இந்தியாவில் உள்ள 14.65 லட்சம் பள்ளிகளுக்கு குடிநீர்க் குழாய், பாக்கெட் குடிநீர், கிணறுகள், அடிபம்புகள், பிற ஆதாரங்கள் மூலமாக குடிநீர் கிடைக்கிறது. எனினும், நாட்டில் உள்ள 29 மாநிலங்களுக்குப் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற கிணறுகளின் மூலமாகத்தான் குடிநீர் கிடைப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இவற்றுள், தமிழகத்தில் 56,000 பள்ளிகள், குடிநீர்க் குழாயை நம்பி உள்ளன. பாக்கெட் குடிநீர் மூலம் 578 பள்ளிகளும் கிணறுகள் மூலம் 285 பள்ளிகளும் பிற ஆதாரங்கள் மூலம் 1,134 பள்ளிகளும் குடிநீர் பெறுகின்றன.
தண்ணீருக்கும் கழிவறைகளுக்கும் தொடர்பு இருப்பதால்தான் இந்தத் தகவல்களை குறிப்பிட வேண்டியுள்ளது. கழிவறைகள் கட்ட கடன் உதவி இவ்வாறு பல்வேறு கவலைக்குரிய அம்சங்களை ஆராய்ந்த பிறகே, பிரதமர் மோடி நாடு முழுவதும் கழிவறைகளைக் கட்டவேண்டும் என்றும் இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவின் முகம் மாறும் என்றும் கூறினார்.
‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மட்டும் மார்ச் 2021ஆம் ஆண்டு வரை 508,000 லட்சம் தனிநபர் இல்லக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 93,000 பொதுக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
Denne historien er fra November 30, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 30, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
‘ஸ்ரீதேவியைச் செல்லமாக அடித்து, முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என் அப்பா'
நடிகை ஸ்ரீதேவியை தனது தந்தையும் காலஞ்சென்ற நடிகருமான என்.டி.ராமாராவ் செல்லமாக அடிப்பார் என்றும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என்றும் தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா கூறியிருப்பது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவாவுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா
முதன்முறையாக ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதர்வா, நடிப்பு ‘ராட்சசி’ இணையும் ‘டிஎன்ஏ’
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ‘டிஎன்ஏ’ திரைப்படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது.
நல்லு தினகரனுக்குக் கவியரசு கண்ணதாசன் விருது
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கிவரும் கவியரசு கண்ணதாசன் விருது இவ்வாண்டு எழுத்தாளர், நாடகாசிரியர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறன்கொண்ட நல்லு தினகரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
50 நாள்கள் காணாமல்போன மலையேறி கண்டுபிடிப்பு
கனடாவின் வடக்கு மலைப் பகுதியில் காணாமல்போன மலையேறி இவ்வாரம் உயிருடன் மீட்கப்பட்டதாக நவம்பர் 27ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது.
பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படவுள்ள அஸ்மின் அலி
மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைச் செயலாளராக அஸ்மின் அலி நியமிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தத் தடை சமூக ஊடக நிறுவனங்கள் கண்டனம்
ஆஸ்திரேலியா, 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தத் தடை விதித்திருப்பதை அடுத்து, சமூக ஊடக நிறுவனங்கள் அந்தச் சட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
இலங்கை தடுப்புக் காவலில் மொத்தம் 141 இந்திய மீனவர்கள்
இலங்கையில் மொத்தம் 141 இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வடிவமைப்பு பிரச்சினை அல்ல: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்திலும் உட்காரும் வசதி மட்டும்தான் உள்ளன. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டுவரப்படும் என இந்திய ரயில்வே அமைச்சு அறிவித்திருந்தது.
இந்தியப் பெண்களின் ‘கழிவறை எனும் கனவு’
இந்தியாவில் ஏறத்தாழ 28,000 அரசுப் பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.