அர்ஜுன் - அனுமார் கோவில்
நடிகர் அர்ஜுன் தனக்குச் சொந்தமான சென்னை போரூரை அடுத்துள்ள கெருகம்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் ஆஞ்சநேயருக்கு ஒரு கோவில் கட்டியிருக்கிறார்.
இல்லற பந்தத்தில் இருந்தாலும், தீவிரமான பக்தி அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் அர்ஜுன், ஆஞ்சநேயரின் நேசர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மலையில் இருந்து எடுக்கப்பட்ட, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த ஆஞ்சநேயர் சிலை அவரது பண்ணைத் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. 28 அடி உயரமும் 17 அடி அகலமும் கொண்டது இந்தச் சிலை.
அடிக்கடி தன் குடும்பத்தோடு வந்து, வாயுவின் மகனை வணங்கிச் செல்கிறார் அர்ஜுன்.
விஜய் - பாபா கோவில்
நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், ஷீரடி சாய் பாபாவின் பக்தர்.
விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரன் பல்லாண்டுகளாக பாபாவின் பக்தை.
பாபா கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை விஜய்யிடம் சொன்னார் ஷோபா. உடனடியாக சென்னை அசோக் நகரில் இடம் பார்க்கப்பட்டது.
ஆனால் மெட்ரோ ரயில் பாதை அந்த இடத்தில் வருவதால் சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் இடம்பார்த்து, ‘பாபா மந்திர்’ என்றபெயரில் கோவிலைக் கட்டியுள்ளார் விஜய்.
பாபா கோவிலில் சிறிய ஆஞ்சநேயர், பிள்ளையார் தனித்தனி சந்நிதிகளில் இருக்கிறார்கள். தன் பல நாள் கனவு நனவானதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார் விஜய்யின் தாயார்.
யோகி பாபு - வாராகி அம்மன்
Denne historien er fra December 01, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 01, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்: ராஷி கண்ணா
தமக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்கிறார் ராஷி கண்ணா.
எந்த விதிமீறலும் இல்லை; கர்மா உங்களை சும்மா விடாது: தனுஷை மீண்டும் விமர்சித்த நயன்தாரா
தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தின் சில காட்சிகளை தங்களுடைய திருமண ஆவணப் படத்தில் பயன்படுத்தியதில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை என நயன்தாரா தெரிவித்துள்ளார்.
கோவில் கட்டிய கோடம்பாக்க நடிகர்கள்
சொந்த வீடு, சொந்த கார் வைத்திருப்பதுபோல், சொந்தமாக கோவில் வைத்திருக்கும் திரையுலக கதாநாயகர்கள், கதை நாயகர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு நெருக்கடி
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவது தொடர்பில் இழுபறி நீடிக்கிறது.
லெஸ்டர் சிட்டி நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோய்
மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிலிருந்து விலகிய சில வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 29ஆம் தேதி அன்று, தனது அணியின் புதிய நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோயை லெஸ்டர் சிட்டி அறிவித்துள்ளது.
பேரங்காடியில் நுழைந்த கரடி; ஊழியர் காயம்
ஜப்பானில் அகிடா நகரத்தில் உள்ள பேரங்காடி ஒன்றில் கரடி புகுந்து ஊழியரைத் தாக்கியிருக்கிறது.
வெளிநாட்டு மருத்துவமனைக்கு புதிய விதிமுறைகள்: சீன அரசு
சீனாவில் வெளிநாடுகளுக்குச் சொந்தமான மருத்துவமனைகள் மருத்துவச் சேவை வழங்க அந்நாட்டில் உள்ள ஒன்பது பகுதிகளில் சீன அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியது.
அமைச்சர்களின் விடுமுறையை ரத்து செய்தார் பிரதமர் அன்வார்
மலேசியாவின் ஒன்பது மாநிலங்களில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) வெள்ளம் சூழ்ந்த நிலையில், கிளந்தான் மாநிலம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
வாரணாசியில் 200 மோட்டார் சைக்கிள்கள் கருகின
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாயின.
'காக்கிநாடா துறைமுகம் கடத்தல் தளமாக மாறிவிடக் கூடாது'
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் சட்டவிரோதமாக அரிசி கடத்தப்பட்டது குறித்து அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆய்வு நடத்தினார்.